செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரியில் கல்லூரி திருவிழா கல்லூரி அரங்கில் கல்லூரி தாளாளர் முனைவர் கோ.ப.செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் ராஜா, கல்லூரியின் டீன் இராமசாமி, கல்லூரியின் துணை முதல்வர் கிருஷ்ணமூர்த்தி, கல்லூரியின் நிர்வாக அலுவலர் சதானந்தன், ஆகியோர் முன்னிலையில் கல்லூரியின் ஆண்டறிக்கையை ராஜா அவர்கள் வாசித்தார்.
அதனைத் தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழக தேர்வில் 95% மற்றும் அதற்கு மேல் பெற்ற மாணவர்களுக்கு கல்லூரியின் தாளாளர் முனைவர் கோ. ப. செந்தில்குமார் அவர்கள் கல்வி கட்டணத்தை காசோலையாக மாணவ மாணவியர்களுக்கு வழங்கினார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக upsc பொது தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் இடம் பிடித்த கிருத்திகா, பட்டிமன்ற பேச்சாளர் கவிதாஜவகர், பேராசிரியர் சுந்தர் ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு பொருள், மற்றும் நற்சான்றிதழ் ஆகியவற்றை வழங்கி கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கினர்.
இதில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் மற்றும் பேராசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.