• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பா.ஜ.க.கூட்டணியில் இஸ்லாமியர்கள் ஆதரவு குறித்து சர்ச்சை..,

BySeenu

May 3, 2025

சமீபத்தில் கோவையை சேர்ந்த ஐக்கிய ஜமாத் பொதுச்செயலாளரும் அ.தி.மு.க.வை சேரந்த சி.டி.சி.ஜப்பார் பா.ஜ.க.கூட்டணியில் இஸ்லாமியர்கள் ஆதரவு குறித்து சர்ச்சை குறித்து தெரிவித்தார்.

இது குறித்து இஸ்லாமியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் ஜப்பார் உடனடியாக ஐக்கிய ஜமாத் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்நிலையில் கோவை மாவட்ட அனைத்து ஜமாத் சார்பாக நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் ஜமாத் தலைவர் முஹம்மது அலி செய்தியாளர்களிடையே பேசினார். அப்போது பேசிய அவர்,கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக கோவையில் நடைபெற்ற பல்வேறு துயர சம்பவங்களில் காவல் துறை மற்றும் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் இணக்கமாக நடந்துள்ளதாக சுட்டி காட்டிய அவர்,ஆனால் தற்போது நிலை தலை கீழாக இருப்பதாக வேதனை தெரிவித்தார்.

இஸ்லாமிய ஜமாத் மக்களின் கோரிக்கைகளை சரி வர பரிசீலிப்பதில்லை என கூறிய அவர்,தமிழக முதல்வர் கோவை மாவட்ட இஸ்லாமிய மக்களின் கோரிக்கைகள் மற்றும் நிலைகளை ஆய்வு செய்ய தனி செயலாளரை நியமித்து குறைகளை கேட்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

தொடர்ந்து பேசிய அவர்,இஸ்லாமிய வேதங்களை படித்த அறிஞர்களாக அறியப்படும் ஆலீம்கள் என்பவர்கள் தங்களை தரம் தாழ்த்தி நடந்து கொள்வதற்கு தமது கண்டனங்களை பதிவு செய்வதாக அவர் கூறினார்.

மேலும் ஐக்கிய ஜமாத் பொது செயலாளர் சி.டி.சி.ஜப்பார் கூறிய கருத்து அவர் கட்சி சார்ந்த கருத்து பதிவு என கூறிய அவர்,இதில் ஜமாத் அவர் மீது நடவடிக்கை எடுத்திருப்பதாக கூறினார்.

இந்த சந்திப்பின் போது கோவை மாவட்ட அனைத்து ஜமாத் நிர்வாகிகள் ஹஜ்ரத் அப்துல் ரகுமான்,சுக்ருல்லா பாபு,பசுலுர் ரஹ்மான் ஆகியோர் உடனிருந்தனர்.