• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

வக்ஃபு திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..,

BySeenu

May 3, 2025

வக்ஃபு திருத்த சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி கோவையில் எஸ் டி பி ஐ கட்சியினர் 500க்கும் மேற்பட்டோர் கருப்பு சட்டை அணிந்து கையில் கருப்பு பலூன்களை வைத்துகொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வக்ஃபு திருத்த சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என நாடு முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக தினந்தோறும் தமிழகத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கோவை குனியமுத்தூர் பகுதியில் எஸ் டி பி ஐ கட்சியின் சார்பாக வக்ஃபு திருத்த சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.எஸ்டிபிஐ கட்சியின் தொண்டாமுத்தூர் தொகுதி தலைவர் குனியமுத்தூர் என் எம் ஜி நாசர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கருப்பு சட்டை அணிந்தபடி பலன்களை கையில் வைத்துக் கொண்டு கோஷங்களை எழுப்பினர். இந்த வக்ஃபு சட்டத்தை திரும்ப பெறும் வரை தொடர்ந்து எஸ்டிபிஐ கட்சி சார்பாக போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.

இதில் எஸ் டி பி ஐ கட்சியின் தொழிற்சங்க மாநில பொதுச்செயலாளர் ரவூப் நிஸ்தார்,வர்த்தக அணி மண்டல தலைவர் அப்துல் கரீம், மாவட்ட அமைப்பு பொதுச்செயலாளர் இப்ராகிம் பாதுஷா, மாவட்ட செயலாளர் அபுத்தாஹிர், மாவட்ட செய்தி தொடர்பாளர் மன்சூர் அலி,மாவட்ட செயற்குழு உறுப்பினர் சாணவாஸ் ,தொகுதி நிர்வாகிகள் லக்கி ரபீக்,அக்பர் அபுதாஹிர் ஜமீஷா பைசல் ஒய்.ரபீக்,கிளை நிர்வாகிகள் இலியாஸ்,வார்டு நிர்வாகிகள் ஃபைசல் இப்ராஹிம் நசீர் ஜமாத் நிர்வாகிகள் முத்தவல்லி அக்பர் ,செயலாளர் அப்துல் ரகுமான் விமன் இந்தியா மூவ்மெண்ட் நிர்வாகிகள் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பி சபோராட்டம் நடத்தினர்.