• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மேயர் மகேஷ் அறிக்கை.

அமைச்சர் பதவியை மீண்டும் பெற்று குமரிக்கு முதலாவதாக வரும் அமைச்சர் மனோதங்கராஜ்க்கு வரவேற்பு வழங்கும் குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் நாகர்கோவில் மேயர் மகேஷ் அறிக்கை.

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தரும் பால்வளத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட த.மனோதங்கராஜ் அவர்களுக்கு கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளர் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ. மகேஷ் B.A., B.L., அறிக்கை

கழக தலைவர் மாண்புமிகு. தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் மு.க.ஸ்டாலின் அவர்களால் பால்வளத்துறை அமைச்சராக மீண்டும் நியமிக்கப்பட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தரும் த.மனோ தங்கராஜ் அவர்களுக்கு எனது தலைமையில் 01.05.2025, வியாழக்கிழமை அன்று மாலை 4.30 மணியளவில் நாகர்கோவில், வடசேரியில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா சிலை அருகில் வைத்து வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு மதியம் 3.00 மணிக்கு வந்தடைகிறார். அங்கிருந்து சாலை மார்க்கமாக மாலை 4.30 மணியளவில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வந்தடைகிறார்.  வரவேற்பு நிகழ்வு முடிந்த பின் தலைவர்கள் சிலைகளுக்கு மாலை அணிவிக்கிறார். 
ஆகவே, இந்த வரவேற்பு நிகழ்வில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட மாநில, மாவட்ட கழக நிர்வாகிகள், மாநகர, ஒன்றிய, நகர, பகுதி கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், பேரூர், வட்ட, கிளை கழக நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கழக அனைத்து சார்பு அணிகளின் நிர்வாகிகள், கழக முன்னோடிகள் மற்றும் கழக உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் தவறாது பங்கேற்று சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.