மதுரை மாவட்டம் சோழவந்தானில் அமைந்துள்ள அருள்மிகு திரௌபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழாகொடியேற்றம் இன்று இரவு நடைபெறுகிறது அதற்காக கோவில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இரவு முழுவதும் மின்னொளி வெளிச்சத்தில் திரௌபதி அம்மன் காட்சியளித்தார். கோவில் பரம்பரை அறங்காவலர்கள் அர்ச்சுனன்,திருப்பதி, ஜவஹர்லால், குப்புசாமி மற்றும் கோவிலைச் சேர்ந்தவர்கள் கொடியேற்றத்திற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

கொடியேற்ற நிகழ்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள் என்பதால் போக்குவரத்து துறை அதிகாரிகள் இன்று இரவு பேருந்துகளை மாற்று வழியில் இயக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் சோழவந்தான் காவல்துறையினர் கொடியேற்ற நிகழ்ச்சியின் போது உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி இறங்குதல் வருகின்ற மே 7ஆம் தேதி சோழவந்தான் மந்தைக்களத்தில் நடைபெற உள்ளது.
                               
                  












              ; ?>)
; ?>)
; ?>)