• Tue. Sep 16th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

ஹாக்கி மைதான திட்டத்திற்கு அடிக்கல் – துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

BySeenu

Apr 27, 2025

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் 10 கோடி ரூபாய் மதிப்பில் சர்வதேச தரத்தில் அமைய இருக்கும் ஹாக்கி மைதான திட்டத்திற்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.

ஆர்.எஸ். புரம் பகுதியில் அமையும் ஹாக்கி மைதானம் 2 கட்டங்களாக பணிகள் நடைபெறுகிறது. முதல் கட்டத்தில் ஹாக்கி மைதானத்தின் முக்கிய அங்கமான டர்ப் தளம், 6 உயர் மின் கோபுர விளக்குகள், சுற்றுச்சுவர், கழிவறைகள், விளையாட்டு வீரர்களுக்கான உடை மாற்று அறை ஆகியவை அமைக்கப்படும்.

ஒவ்வொரு போட்டிக்கும் டர்ப் தளத்தில் 20,000 லிட்டர் நீர் செலுத்துவது அவசியம் என்பதால் அதற்கான நீர் தேக்கும் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் ஜெர்மன் தொழில்நுட்பம் மூலம் இந்த நீரை மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்தும் அம்சம் இடம்பெறவுள்ளது. 2ம் கட்டத்தில் பார்வையாளர் அரங்கம், முக்கியஸ்தர்களுக்கான நுழைவு, தனி தளம், சார் நிறுத்தம், அலுவலகம் ஆகிய சில வசதிகள் இடம்பெறும்.

தொடர்ந்து 29 கோடியே 99 லட்சத்தில் முடிவுற்ற 64 திட்டங்களின் தொடக்க விழா, 82 கோடியே 14 லட்சம் ரூபாய் மதிப்பில் 132 புதிய திட்டங்களுக்கான தொடக்க விழா மற்றும் 239 கோடியே 41 லட்சம் ரூபாய் மதிப்பில் 25 ஆயிரத்து 24 பயனாளிகளுக்கு வழங்கினார்.

மேலும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது..,

கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 22,000 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்குவது, சுமார் 113 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணி நிறைவுற்ற பணிகளை தொடங்கி வைப்பது, கோவை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஒன்பது கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயற்கை புல்வெளியில் ஹாக்கி மைதானம் தொடங்கி வைப்பது, உள்ளிட்ட பணிகள் எல்லாம் தற்போது துவங்கப்பட்டு உள்ளது. சுமார் 2250 சுய உதவிக் குழுக்களுக்கு, 15 கோடி ரூபாய் அளவில் வங்கி கடன் நிதி உதவி வழங்கப்பட உள்ளது. 220 குடும்பங்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்கப்பட உள்ளது. கோவைக்கு எப்போது வந்தாலும் தனி புத்துணர்ச்சி கிடைக்கும். அந்த புத்துணர்வு என்பது இன்றைக்கு உங்களையெல்லாம் பார்க்கும் போது எனக்கு மீண்டும் வந்து உள்ளது. முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசு என்றாலே எல்லோருக்கும் எல்லாமும் என்று அர்த்தம். இங்கே மாணவர்கள், மாற்றுத் திறனாளிகள், பெண்கள், விவசாயிகள், தொழில் முனைவோர்கள் விளையாட்டு வீரர்கள் இணைந்து வந்து இருக்கிறீர்கள். இந்த அரசருக்கு என்றைக்குமே பக்கபலமாக இருக்க கூடிய தாய்மார்கள் பல்லாயிரம் பேர் இங்கு வந்து இருக்கிறீர்கள். இப்படி சமூகத்திற்கு என்ன தேவை என்பதை அறிந்து ஒவ்வொரு திட்டமாக நிறைவேற்றுவது தான், முதலமைச்சரின் திராவிட மாடல் அரசு. அதனால் தான் நம் அரசின் திட்டங்கள் மக்களிடம் மிகப்பெரிய வெற்றியை பெற்று உள்ளது. குறிப்பாக மகளிருக்கான திட்டங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்று உள்ளது. மகளிருக்கான திட்டத்தில் தான் முதலமைச்சர் முதல் கையெழுத்து போட்டார். அதன்படி இன்று 700 கோடி பயணங்களை மக்கள் கட்டணமில்லாமல் பேருந்தில் பயணம் செய்து இருக்கிறார்கள்.

புதுமைப்பெண் திட்டம் மூலமும் தமிழ் புதல்வன் திட்டம் மூலமும் மாணவ – மாணவியருக்கு மாதம் தோறும் கல்வி ஊக்க தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. காலையில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் பொழுது பெண்கள் கஷ்டப்படக் கூடாது என்பதற்காக, மாணவர்களுக்காக காலை உணவு திட்டத்தை முதல்வர் தொடங்கினார். இது எல்லாருக்கும் மேலான இந்தியாவே திரும்பி பார்க்கும் ஒரு திட்டம் என்னவென்றால், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம். இந்த திட்டம் மூலமாக ஒவ்வொரு மாதமும் ஒரு கோடியே 15 லட்சம் மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் கூட முதல்வர் சட்டப் பேரவையிலே அறிவித்து இருக்கிறார், இதுவரை மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்காத மகளிர் ஜூலை மாதம் விண்ணப்பிக்கலாம் எனக் கூறி இருக்கிறார். விரைவில் இன்னும் அதிகமான மகளிருக்கு உரிமை தொகை கிடைக்கப் போகிறது.

மகளிர் சுய உதவிக் குழுக்களை கருத்தில் கொண்டு, இந்த ஆண்டு 37 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வங்கி கடன் இணைப்புகளை முதல்வர் வழங்க உத்தரவு தருகிறார். குறிப்பாக கோவை மாவட்டத்தில் உள்ள குழுக்களுக்கு கடந்த நான்கு ஆண்டுகளில் 300 கோடி அளவுக்கு வங்கி கடன் வழங்கப்பட்டு இருக்கிறது. இதெல்லாம் கடன் தொகையாக முதல்வர் பார்க்கவில்லை, இதெல்லாம் உங்கள் மேல் இருக்கும் நம்பிக்கையாக முதல்வர் பார்க்கிறார். கோவை மாவட்டத்தில் சுய உதவிக் குழுக்கள் பொருத்தவரை, பல்வேறு சாதனைகளை செய்து காட்டி உள்ளனர். காரமடையில் செயல்பட்டுக் கொண்டு இருக்கிற பூந்தென்றல் மகளிர் சுய உதவிக் குழுவில், உறுப்பினராக இருக்கக் கூடிய பட்டு செல்வியின் கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்து விட்டார். தன்னுடைய குடும்பத்தை காப்பாற்ற போட்டோ ஸ்டுடியோ ஒன்றில் அவர் வேலை பார்த்து வந்தார். அங்கு அவர்கள் கொடுக்கக் கூடிய சம்பளம் 9000 ரூபாயாக இருந்தது. அது அவருடைய குடும்பத்தை கவனிக்க போதுமானதாக இல்லை. அவருடைய குழுவின் மூலம் வங்கி கடன் இணைப்புக்கு அவர் விண்ணப்பித்தார். அதில் அவருக்கு 6 லட்சம் ரூபாய் கடன் கிடைத்து உள்ளது.

தற்போது சொந்தமாக அவருடைய பகுதியில் போட்டோ ஸ்டூடியோ ஒன்றை அவர் தொடங்கி இருக்கிறார். இதில் இருந்து மாதம் 30 ஆயிரம் ரூபாய் முதல் வருமானம் ஈட்டி வருகிறார். இது தான் மகளிர் சுய உதவி குழுக்களின் வெற்றி. அவர்களுக்கு அனைவரின் சார்பாக வாழ்த்துக்கள். வேலைக்கு செல்வோரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண்கள் 43 சதவீதம் என்பது பெருமையான விஷயம். அதேபோல பட்டா வேண்டும் என்ற பல்லாண்டு காலக் கோரிக்கையை ஏற்று இன்று 220 பேருக்கு இந்த மேடையில் பட்டா வழங்க இருக்கிறோம். பட்டா என்பது வெறும் ஆவணம் கிடையாது, உங்களுடைய இடத்தின் மீது உங்களுக்கு இருக்கக் கூடிய சட்ட உரிமை. அதே போல இங்கே இருக்கக் கூடிய மாற்றுத் திறனாளிகளுக்கு, உங்களுக்கான திட்டங்களை முதல்வர் ஒவ்வொரு நாளும் பார்த்து பார்த்து செய்து கொண்டு இருக்கிறார். உள்ளாட்சி அமைப்புகளில் நியமன முறையில் மாற்றுத் திறனாளிகளை தேர்வு செய்வதற்கான சட்ட மசோதாவை முதல்வர் அறிமுகப்படுத்தி இருக்கிறார்.

இதனால் 13,000 மாற்று திறனாளிகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் உள்ளே வரக் கூடிய வாய்ப்பு கிடைக்கிறது. மக்களாகிய நீங்களும் இந்த அரசிற்கு துணை நிற்க வேண்டும். அரசினுடைய திட்டங்களை சாதனைகளை உங்களுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் எடுத்துக் கூற வேண்டும். இந்த அரசும் முதல்வரும் இன்னும் கூடுதலாக உழைக்க தயாராக இருக்கிறார்கள் என்று கூறினார்.