• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் 16வது மாவட்ட மாநாடு

ByAnandakumar

Apr 27, 2025

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் 16வது மாவட்ட மாநாடு கரூரில் நடைபெற்றது. இதில் சத்துணவு ஊழியர்களுக்கு சிறப்புக்கால முறை ஊதியத்தில் பணிபுரிந்து வருபவர்களுக்கு காலம் முறை ஊதியம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கரூர் மாவட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் 16 வது மாவட்ட மாநாடு கரூர் பகுதியில் உள்ளே சிஎஸ்ஐ பள்ளியில் நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் செல்வராணி தலைமை தாங்கினார். மேலும் மாநில செயற்குழு உறுப்பினர் தமிழ்மணி வரவேற்று பேசினார். மாநில பொதுச் செயலாளர் மலர்விழி துவக்க உரையாற்றினர்.

இந்த மாநாட்டில் புதிய ஓய்வூதிய திட்டத்தினை கைவிட்டு பயனளிப்பு ஓய்வூதியம் வழங்க வேண்டும், தமிழக அரசால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள காலை உணவு திட்டத்தின் சுய உதவி குழுக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் மூலமாக அமுல்படுத்துவதை கைவிட்டு சத்துணவு ஊழியர்களுக்கு நடத்திட உரிய அரசாணை வெளியிட வேண்டும், அரசு துறையில் உள்ள காலியிடங்களை காலம் வரை ஊதியத்தில் நிரப்பிட வேண்டும். காலை உணவு திட்டத்தின் சத்துணவு ஊழியர்களுக்கு வழங்க வேண்டும். பெண் ஊழியர்களுக்கு விசாக கமிட்டி செயல்படுத்த வேண்டும். 60 ஆயிரத்துக்கு மேற்பட்ட காலியிடங்களை நிரப்பிட வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.