முஸ்லிம்களின் தான சொத்துக்களை கபளீகரம் செய்வதற்காக ஒன்றிய பாஜக அரசு அமல்படுத்தியுள்ள வக்பு திருத்த சட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தி கூடலூர் நகர தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பாக இன்று பிற்பகல் கூடலூர் பஜார் வீதியில் கூடலூர் நகரத் தலைவர் சாகுல் அமீது தலைமையில் கருப்பு பட்டை அணிந்து மாபெரும் கண்டன முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் அப்பாஸ் மந்திரி, முஹைதீன் ஆண்டகை பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலவி.முகம்மது ஷிஹாப்புத்தீன் ஆகியோர் வக்பு திருத்த சட்டத்தின் பாதகங்கள் குறித்து கண்டன உரையாற்றினார்கள்.
மாவட்ட துணைத் தலைவர் சலீம் பாட்ஷா, மாவட்ட சுற்றுச்சூழல் அணி செயலாளர் நியாஸ் அகமது, கம்பம் நகர தலைவர் அன்சாரி, கூடலூர் நகர தமுமுக செயலாளர் முகமது ரபீக் மற்றும் அஜ்மல் கான் ஆகியோர் கண்டன கோசம் எழுப்பினார்கள்.
கூடலூர் நகர மமக செயலாளர் ஹைதர் அலி, பொருளாளர் ராஜா முகமது, துணைச் செயலாளர் ராஜா முகமது மற்றும் நிர்வாகிகள், ஜமாத் நிர்வாகிகள், ஜமாத்தார்கள் கலந்து கொண்டு ஒன்றிய அரசின் சிறுபான்மை விரோத சட்டங்களுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்கள்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 300க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக, காஷ்மீரில் தீவிரவாதிகள். தாக்குதலில் உயிர் இழந்தவர்களுக்கு கூட்டத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.