மக்களின் அத்தியாவசிய உணவ பொருட்களான மீன் இறைச்சி, கறி இறைச்சி, பால் மற்றம் பழம் வகைகளில் ரசாயன பொருட்கள் கலக்கப்படுவதால் மக்கள் பல்வேறு உபாதைகளுக்கு ஆளாக்கப்பட்டு மக்களின் நலன் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுகிறது.
உணவு பொருட்கள் நீண்ட நாள் கெடாமல் இருப்பதற்காகவும்,
பார்மலின் என்ற ரசாயன பொருள் கலக்கப்படுகிறது. இந்த ரசாயனம் கலந்த மீன்கள் உண்ணுவதால் தோல், கண்கள் பாதிக்கப்படுவதுடன் வயிறு, சிறுநீரகம், கல்லீரல் பாதிப்பு மற்றும் மனித செல்களில் புகுந்து புற்று நோயை உண்டாக்கும் அபாயம் உள்ளது என்று குறிப்பிட்டார்.

பால் மற்றும் மாம்பழம், வாழைப்பழம் உள்ளிட்ட பல்வேறு பழ வகைகளில் எத்தஃபோன் மற்றும் எத்திலீன் டை குளோரைடு போன்ற ரசயான பொருட்கள் கலக்கப்படுகின்றன. யூரியா, சலவை சோப்பு, தூள் சோப்பு, போரிக் அமிலம், ஹைட்ரஜன் பெராக்சைடு, ஸ்டார்ச், காஸ்டிக் சோடா, சோடியம் கார்பனேட், சோடியம் பைகார்பனேட் போன்ற ரசாயன பொருட்களை பாலில் கலக்கப்படுகின்றன என்று தெரிவித்தார்.
இதுபோன்ற தவறுகளை ஆய்வு செய்வதற்கோ, அல்லது பரிசோதனை செய்வதற்கோ புதுச்சேரி அரசில் சம்பந்தப்பட்ட துறைகள் ஒன்றிரண்டு அதிகாரிகள் மட்டுமே உள்ளனர். எனவே துணைநிலை ஆளுநர் அவர்கள் உடனடியாக உயிர்மட்ட குழு அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தைக் கூட்டி ரசாயன பொருட்கள் கலந்த உணவ பொருட்கள் புதுச்சேரியில் விற்பனை செய்வதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,
மீன் வகை மற்றும் பழவகை உள்ளிட்ட உணவு பொருள்களில் கலப்படம் செய்து மனித உயிருக்கு தீங்கு விளைவிக்கும் வியாபாரிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்து அவர்களின் கடை உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் வலியுறுத்தினார்.