பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பவே பயப்படும் சூழல் திமுக ஆட்சியில் உள்ளது, பள்ளி செல்லும் குழந்தைகள் முதல் வயதான மூதாட்டிகள் வரை பாதுகாப்பற்ற நிலமை ஏற்பட்டுள்ளது, திமுக ஆட்சியை அகற்ற திமுகவை எதிர்க்கும் அனைத்து கட்சிகளும் ஓரணியில் இணைய வேண்டும் – ஓபிஎஸ் காண இடம் அப்படியே உள்ளது அவரை நாங்கள் கைவிடவில்லை, மயிலாடுதுறையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் டிடிவி தினகரன் பேட்டி :-

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை தனியார் திருமண மண்டபத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக சட்டமன்றத் தொகுதி செயல்வீரர்கள் வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் மாவட்ட செயலாளர் பாரிவள்ளல் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பங்கேற்றார் முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த திரு டிடிவி தினகரன்
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் மோடி பிரதமராக வேண்டும் என்பதற்காக தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து பணியாற்றினோம், தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பற்ற சூழ்நிலை திமுக ஆட்சியில் நிலவி வருகிறது. பள்ளி செல்லும் மாணவிகள் முதல் வயதான மூதாட்டிகள் வரை யாருக்கும் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. கஞ்சா கொலை கொள்ளை என தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து காணப்படுகிறது. சட்ட விரோத திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும். இதற்காக திமுகவை எதிர்க்கும் அனைத்து கட்சிகளும் ஓரணியில் இணைய வேண்டும், தேர்தல் காலத்தில் திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் நான்கு ஆண்டுகளாக மக்களை ஏமாற்றி வருகிறது.

இந்த ஆட்சியை முடிவுக்கு வந்தால் மட்டுமே மக்களுக்கு நிம்மதி ஏற்படும். அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு ஓய்வூதியம் பழைய முறையில் வழங்கப்பட வேண்டும் என்று எதிர் கட்சியாக இருக்கும் பொழுது ஸ்டாலின் ஆர்ப்பாட்டம் நடத்தினார் ஆனால் தற்பொழுது வாக்குறுதிகளை மறந்து விட்டார் இதற்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள். திமுகவை எதிர்க்கும் சக்திகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும், திரு ஓபிஎஸ் அவர்கள் ஒதுக்கப்படவில்லை.
அவருக்கான இடம் அப்படியேதான் இருக்கிறது நாங்கள் அவரை கைவிடவில்லை என்று தெரிவித்தார். தொடர்ந்து ஆலோசனைக் கூட்டத்தில் டிடிவி தினகரன் பங்கேற்று கழக நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். நிகழ்ச்சியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் திரு எம் ரங்கசாமி மற்றும் திரளான நிர்வாகிகள் பங்கேற்றனர்.