காஷ்மீர் பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிர் நீந்தவர்களுக்கு நாகப்பட்டினம் மாவட்ட எஸ்டிபிஐ கட்சி சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அமைதி கூட்டம் நடைபெற்றது.

நாகப்பட்டினம் அபிராமி அம்மன் திடலில் எஸ்டிபிஐ கட்சி மாவட்ட தலைவர் சேக் அலாவுதீன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் எஸ்டிபிஐ கட்சியினர் மனிதநேயத்தின் மீதான கொடூர தாக்குதலை கண்டித்தும், தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மெழுகுவர்த்தி ஏந்தி 5 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர். மேலும் தாக்குதலில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து தூக்கிலிட வேண்டுமென அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.