தமிழக அரசை கண்டித்து விவசாயிகள் சங்கங்களின் சார்பாக தொடர் காத்திருப்பு போராட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயில் நடைபெற்றது.
ஜனவரி மாதம் பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு நிவாரணம் வழங்காத தமிழக அரசை கண்டித்து விவசாயிகள் சங்கம் சார்பில், தொடர் காத்திருப்பு போராட்டம், புதுச்சேரி மாநில முன்னாள் வேளாண்துறை அமைச்சர் கமலக்கண்ணன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான விவசாயிகள் பங்கேற்றனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்த ஆண்டு சுமார் ஒரு லட்சத்து 70 ஆயிரம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டது. அறுவடை நெருங்கிய நேரத்தில் ஜனவரி மாதம் 17 மற்றும் 18 ஆகிய இரண்டு தேதிகளில் புனித கன மழை காரணமாக 60,000ஏக்கர் அளவிற்கு சம்பா பயிர் நீரில் மூழ்கி சேதமடைந்தது. பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தும் இதுவரை நிவாரணம் எதுவும் வழங்கப்படவில்லை, மேலும் கடந்த நான்காண்டுகளாக மயிலாடுதுறை மாவட்டத்தில் பலமுறை பயிர் சேதம் ஏற்பட்டும் இன்சூரன்ஸ் நிவாரணம் வழங்கப்படாமல் வேளாண் துறை புள்ளியல் துறை, மற்றும் பயிர் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் கூட்டு சேர்ந்து விவசாயிகளை ஏமாற்றி வருவதாக தெரிவித்தும், நிவாரணம் வழங்காத தமிழக அரசை கண்டித்தும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

எங்க தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் துரைராஜ் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் புதுச்சேரி மாநில முன்னாள் வேளாண்துறை அமைச்சர் கமலக்கண்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்று பேசினார் நூற்றுக்கு மேற்பட்ட விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்றனர்.