கன்னியாகுமரி மாவட்டம் மிடாலம் பகுதியில் பல தலைமுறைகளாக வசித்து வந்த ஏழை குடும்பங்கள் வீட்டு வரி, குடிநீர் கட்டணம், மின் கட்டணம் செலுத்தி வந்த நிலையில் 2013ம் ஆண்டு எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, வருவாய்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் இணைந்து வீடுகளை இடிக்க சென்ற போது, மக்களுடன் சேர்ந்து போராடியதற்காக காவல்துறையால் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் நீதிமன்றம் தனக்கு மூன்று மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறியதற்கு எதிராக மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளதாக ராஜேஷ்குமார் எம்எல்ஏ தரப்பு தெரிவித்துள்ளனர்.