சர்வதேச சுற்றுலா இடமான கன்னியாகுமரியில் காவல்துறையின் சுற்றுலா ரோந்து சேவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர்.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான பன்மொழி, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். குமரி வரும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு மற்றும் அவர்களுக்கான பாதுகாப்பு தன்மை குறித்து பல்வேறு இந்திய மொழிகளில் மற்றும் ஆங்கிலத்தில் தகவல் சொல்லும் காவலர்களை கொண்ட சுற்றுலா ரோந்து சேவைக்கான இரண்டு நான்கு சக்கர வாகனங்கள், மூன்று இரண்டு சக்கர வாகனங்களை குமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர்.ஸ்டாலின் முக்கடல் சங்கம் பகுதியில் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் பன்மொழி சுற்றுலா பயணிகள் பங்கேற்றனர். குறிப்பாக கடலில் புனித நீராடும் சுற்றுலா பயணிகள் அதற்காக ஒதுக்கப்பட்டுள்ள கடல் பகுதியில் மட்டுமே புனித நீராடவேண்டும். “செல்பி” எடுக்கும் ஆசையில் கடலில் உள்ள பாறைகளில் ஏறுவது உயிருக்கே ஆபத்தாக முடியும்.
இந்த சுற்றுலா ரோந்து பணியில் இருக்கும் காவலர்கள் பல்வேறு மொழிகளில் பேசும் பாண்டித்தியம் உடையவர்கள் என்பதை தெரிவித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.ஸ்டாலின். குமரி வந்து நலமாக ஊர் சென்று சேரவேண்டும். கன்னியாகுமரிக்கு நீங்கள் மேற் கொண்ட சுற்றுலா எப்போதும் உங்கள் நினைவுகளின் இனிதானதாக இருக்க வேண்டும்.

கன்னியாகுமரி சுற்றுலா பகுதியோடு, திற்பரப்பு அருவி பகுதியிலும் சுற்றுலா ரோந்து காவலர்கள் 24_மணி நேரமும் அவர்களது பணியில் இருப்பார்கள் என கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் பகுதியில் இதற்கான வாகனங்களை தொடங்கி வைத்த நிகழ்வில் காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர் . ஸ்டாலின் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் கன்னியாகுமரி துணை காவல் கண்காணிப்பாளர் மகேஷ்குமார், ஆய்வாளர் சரவணன், மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சாந்தகுமாரி, சப்_இன்ஸ்பெக்டர் ரகுபாலாஜி ஆகியோர் பங்கேற்றனர்.