• Mon. Nov 17th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

நிரந்தர அரசு பணி இனி இல்லை : அரசாணை வெளியீடு

Byவிஷா

Apr 22, 2025

அரசு அலுவலகங்களில் பணியாற்றும் பல ஒப்பந்த பணியாளர்கள் நிரந்தர பணி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், தற்காலிகமாக பணியமர்த்தப்படும் தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் மற்றும் 8ஆம் வகுப்பு வரை படித்தவர்களுக்கு இனி நிரந்தர அரசு பணி கிடையாது என தமிழக அரசு அராசணை ஒன்றை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் டிகிரி படிக்காதவர்களும் தற்போது நிரந்தரமாக அரசு வேலையில் சேரலாம். தமிழில் எழுத படிக்கத் தெரிந்தவர்கள் மற்றும் 8ஆம் வகுப்பு வரையில் படித்தவர்கள் ஆகியோருக்கு அவரவர் தகுதிகளின் அடிப்படையில் அரசு பணிகள் வழங்கப்பட்டு வந்தது. அதாவது, ஒவ்வொரு துறை அலுவலகங்கள், கல்லூரிகள், அரசு பள்ளிகள் என அனைத்திலும் ஒரு உதவியாளர், காவலாளி, தூய்மை பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.
அதுபோலவே நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி, பொதுப்பணி, நீர்வளம் ஆகிய துறைகளில் தோட்டக்கலை தொழிலாளிகள் (நீராளர்), இரவு நேர காவலாளிகள், உதவியாளர்கள் இருப்பார்கள். இதுபோலவே தமிழகம் முழுவதும் சுமார் 1.5 லட்சம் பணியிடங்கள் இருந்து வருகின்றன. இவர்கள் நிரந்தர பணியாளர்களாக இருந்து வந்தனர்.
இந்த பணியிடங்களை அந்தந்த மாவட்ட ஆட்சியர் மூலமாகவோ அல்லது வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலமாகவோ நேர்காணல் நடத்தி நிரப்புவார்கள்.
இந்தநிலையில் அரசு முக்கிய அரசாணையை வெளியிட்டுள்ளது. முதற்கட்டமாக உயர்க்கல்வித் துறை இதற்கான அரசாணையை வெளியிட்டிருக்கிறது.
மேற்குறிப்பிட்ட பணியிடங்களை இனி வரும் காலங்களில் காலமுறை ஊதியத்தில் நியமனம் செய்ய முடியாது என TNPCR ACT 1976ல் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இனி இவர்கள் ஒப்பந்த அடிப்படையிலேயே நியமிக்கப்படுவார்கள் என்று இந்த அரசாணை கூறுகிறது. இதன்மூலம் குறிப்பிட்ட காலம் மட்டுமே இவர்களால் இந்த பணியில் இருக்க முடியும்.
ஏற்கனவே அரசு அலுவலகங்களில் பணியாற்றும் பல ஒப்பந்த பணியாளர்கள் நிரந்தர பணி கேட்டு போராட்டத்தில் ஈடுபடும் நிலையில் இந்த அறிவிப்பு, சாதாரண அரசு ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த ஆணையானது எதிர்காலத்தில் எழுத படிக்கத் தெரிந்தவர்கள் முதல் 8ஆம் வகுப்பு வரை படித்தவர்களின் அரசு வேலை கனவு சிதையும் வகையில் உள்ளது.
உயர்க்கல்வித் துறையை தொடர்ந்து மற்றத் துறைகளும் இதுதொடர்பான அரசாணையை வெளியிடும் என தகவல்கள் வருகின்றன.