வெம்பக்கோட்டை ஒன்றியம் கீழச் செல்லையாபுரம், கோவில் செல்லையாபுரம், கண்மாய் சூரங்குடி, எலுமிச்சாங்காய் பட்டி ,கிருஷ்ணாபுரம், உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது.

காற்று பலமாக வீசியதால் கீழச்செல்லையாபுரம் பகுதியில் இரண்டு மின்கம்பங்கள் உள்பட ஐந்து மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. இதனால் அப்பகுதியில் ஏழாயிரம் பண்ணை துணை மின் நிலையத்திலிருந்து மின்தடை செய்யப்பட்டது. மேலும் கீழச்செல்லையாபுரம், தூங்கா ரெட்டியபட்டி, சாத்தூர் செல்லும் மெயின் ரோட்டில் ஏழு மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து சுமார் 45 நிமிடம் பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்த ஏழாயிரம் பண்ணை தீயணைப்பு நிலையத்திலிருந்து தீயணைப்பு வீரர்கள் இரண்டு மணி நேரம் போராடி சாய்ந்த மரங்களின் கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தினாரகள். அன்பின் நகரம், வெள்ளையாபுரம், மார்க்கநாதபுரம், உள்ளிட்ட பகுதிகளில் 20 க்கும் மேற்பட்ட வாகை, புளிய மரங்கள் சாய்ந்து விழுந்தன. கடைகளுக்கு முன்பு இருந்த விளம்பரப் பலகைகள் காற்றில் பறந்தன.