பல்லாவரம் திருநீர்மலை, ரங்கநாத பெருமாள் திருக்கோயில் 19 கோடி 60 லட்சம் செலவில் ரோப் கார் விரைவில் அமைக்கப்படும் என அமைச்சர் சேகர் பாபு கூறினார்.
சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில், பல்லாவரம் தொகுதி, திருநீர்மலை, அருள்மிகு ரங்கநாத பெருமாள் திருக்கோயில் பணியாளர்களுக்கான குடியிருப்புகளை பயன்பாட்டிற்குக் கொண்டுவர அரசு வழிவகை செய்யுமா ? என சட்டமன்ற உறுப்பின கருணாநிதி கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் சேகர் பாபு,
பல்லாவரம் தொகுதி, திருநீர்மலை, ரங்கநாத பெருமாள் திருக்கோயில் 61வது திவ்ய தேசம். 2 கோடி 60 லட்சம் செலவில் 12 அர்ச்சகர் குடியிருப்பு கட்டப்பட்டு வருகின்றது.
92 சதவீத பணிகள் நிறைவேற்றுகின்றது. அடுத்த மாத இறுதிக்குள்ளாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இந்த ஆட்சி வந்த பிறகு 186 கோடி ரூபாய் செலவில் சுமார் 586 அர்சகர்கள் மற்றும் பணியால் குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. அதில் 42 குடியிருப்புகள் அர்ச்சகர்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.
மேலும், அடுத்த மாதம் இறுதியில் நானும் அந்த மாவட்ட அமைச்சர் த.மோ.அன்பரசனும் சென்று அந்த 12 குடியிருப்புகளை அர்சகர்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்படும் என்றார்.
மேலும், 19 கோடி 60 லட்சம் செலவில் ரோப் கார் அமைக்க அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதற்கு உண்டான் நிதி ஒட்டுமொத்தமாக அரசே மானியமாக வழங்கும். விரைவில் அந்த ரோப் கார் உண்டான பணிகள் துவக்கப்படும் என்றார்.




