• Thu. Apr 30th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

ஜாபர் சாதிக், முகமது சலிமுக்கு நிபந்தனை ஜாமீன்

Byஜெ.துரை

Apr 21, 2025

ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர் முகமது சலிமுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமலாக்கதுறை வழக்கில் கைது செய்யபட்ட ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர் முகமது சலிமுக்கு நிபந்தனை வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக முன்னாள் நிர்வாகியும், திரைப்பட தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக், சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறி, அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்து, கடந்த 2024ம் ஆண்டு ஜூன் 26 தேதி கைது செய்தது. பின்னர் அவரது சகோதரர் முகமது சலீம் ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் ஜாமீன் கோரி ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி சுந்தர் மோகன், மணிஷ் சிஷோடியா தீர்ப்பை முன் உதராணமாக காட்டி, ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர் முகமது சலீமுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.