நீலகிரி மாவட்டம் உதகையை அடுத்த காரப்பிள்ளு கிராமத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு அருகில் உள்ள மல்லிகொரை நீர் ஊற்று நீராக உருவாகி ஓடையின் வழியாக காரப்பிள்ளு கிராமத்திற்கு பல வருடங்களுக்கு மேல் இந்த குடிநீரை கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது இந்த குடிநீர் வருகின்ற ஓடையில் 5, 6 கிணறுகள் எடுக்கப்பட்டு குடிநீரை விவசாயத்திற்கு பயன்படுத்தி வருவதால் கிராம மக்களுக்கு குடிநீர் இல்லாமல் மிகவும் பாதிக்கப்பட்டு வருவதாகவும், அத்தியாவசியமான குடிநீர் தேவையை கிராமத்திற்கு கொடுக்க வேண்டும் என அக்கிராமத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளித்தனர்.