புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியம், பிரசன்ன ரெகுநாதபுரம் என்ற கடையக்குடி அருள்மிகு சீதா லக்ஷ்மண ஹனுமத் ஸமேத பிரசன்ன ரெகுநாதப் பெருமாள் (ஸ்ரீ ராமர்) திருக்கோயில் ஜீர்ணோத்தாரண புனரஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கடந்த 18ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஆச்சாரியால் அழைப்பு நடைபெற்று கும்பயாக சாலை விசேஷ திருத்தேவாரம் சாற்றுமடை கோஷ்டி குருநாதி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நேற்று 19-ம் தேதி இரண்டாம் கால பூஜை, மூன்றாம் காலை பூஜை நடைபெற்றது.
இன்று காலை 5 மணிக்கு கணபதி பூஜை ஸ்வஸ்தி ஸ்ரீ புண்ணியாஹாவாசம் செய்யப்பட்டு பூர்ணா நதி நடைபெற்றது பின்னர் குடிநீர் அடங்கிய குடங்களுக்கு தீபாரதனை காட்டப்பட்டது அதனைத் தொடர்ந்து பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க காவேரி , வெள்ளாற்று, கங்கை நதி மற்றும் புண்ணிய நதிகளில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு, யாக சாலை பூஜைகள் செய்யப்பட்டு மங்கள வாத்தியம் முழங்க, பட்டாச்சாரியார்கள் கோவிலை சுற்றி வந்து கருட பகவான் வானில் வட்டமிட பட்டாச்சாரியார்கள் வேதங்கள் கூறி கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி தீபாராதனை காட்டினார்.

அப்பொழுது ட்ரோன் பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது மூலம் இவ்விழாவில் சுற்றுவட்டார பகதர்களும், பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டு அருள்மிகு ஸ்ரீ பிரசன்ன ரெகுநாத பெருமாளின் அருள் பெற்றனர். விழாவில் பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் அறுசுவை அன்னதானம் வழங்கபட்டது.
முன்னதாக தமிழக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி விஜயபாஸ்கர் கும்பாபிஷே விழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார் பின்னர் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி யார் வாழ்த்து மடலை விழா குழுவினரிடம் வழங்கினார் அவற்றை பெற்றுக் கொண்ட விழா குழுவினர் கழகப் பொதுச் செயலாளருக்கு தங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்தனர்.