முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது போல, கூட்டணி அமைத்தவர்கள், கூட்டணி அமைச்சரவை என்றும் மற்றொருவர் கூட்டணி தான், அமைச்சரவை என்றும் கூறுகின்றனர். எனவே வேறுபாடுகள் நிறைந்த அந்தக் கூட்டணி, ஒற்றுமை இல்லாத கூட்டணி. முப்பையூரில் நடைபெற்ற முதல்வர் பிறந்த நாள் பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன் குற்றம் சாட்டியுள்ளார் .

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள முப்பையூரில் திமுக சார்பில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா பட்டிமன்றம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன் கலந்துகொண்டு 1072 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசும்போது, பல தடைகளை கலைந்தெறிகின்ற மாமனிதராக, பல்வேறு சட்டப் போராட்டங்களை நடத்தி உரிமையை நிலை நாட்டுகின்ற முதல்வராக ஸ்டாலின் திகழ்கின்றார்.
குறிப்பாக ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு நடைபெற்ற அதிமுக ஆட்சியில் தமிழகத்தின் பல்வேறு உரிமைகள் பறிக்கப்பட்டது. எனவே மீண்டும் அந்த ஆட்சி நடைபெற வேண்டும் என பாஜகவும், அதிமுகவும் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளனர். ஆதலால் தமிழகத்தின் உரிமையும், தமிழ் மொழியின் பெருமையையும், காக்கக்கூடியவர்கள் தமிழகத்தை வளர்ச்சி பாதையில் எடுத்துச் செல்லக் கூடிய முதல்வன் ஸ்டாலின் தலைமையினான திமுகவை மக்கள் தொடர்ந்து ஆதரிக்க வேண்டும்.
மீண்டும் அதிமுக தலைமையிலான அலங்கோல , அடிமை ஆட்சி அமைந்து விடக்கூடாது என்பவர், முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது போல, கூட்டணி அமைத்தவர்கள், கூட்டணி அமைச்சரவை என்றும் மற்றொருவர் கூட்டணி தான் அமைச்சர் என்றும் கூறுகின்றனர். எனவே வேறுபாடுகள் நிறைந்த அந்தக் கூட்டணி, ஒற்றுமை இல்லாத கூட்டணி என சாடினார். தொடர்ந்து அமைதியான மாநிலமான தமிழகத்தில், மதவாதத்தை கிளப்பி கலவர பூமியாக மாற்ற துடிப்பவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் என அமைச்சர் கே ஆர் பெரியகருப்பன் கேட்டுக்கொண்டார்.