பெரம்பலூர் நகர கழகம் சார்பில், கழகத்தலைவர் தமிழக முதலமைச்சர் மாண்புமிகு
மு.க. ஸ்டாலின் அவர்களின் 72-ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம், பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது .

பெரம்பலூர் நகர கழகச் செயலாளர் – சட்டமன்ற உறுப்பினர் – எம்.பிரபாகரன் தலைமையில், 6-ஆவது வார்டு கழகச் செயலாளர் ஜே.எஸ்.ஆர்.கருணாநிதி வரவேற்புரையில், நகர அவைத்தலைவர் கோ.ரெங்கராஜ், நகர துணைச் செயலாளர்கள் நூ.சபியுல்லா, ஆர்.ரெங்கநாதன், கல்பனா முத்துக்குமார், மாவட்ட பிரதிநிதிகள் எஸ்.ஆர்.ராஜேந்திரன், கே.அன்பழகன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில், கழக துணைப் பொதுச்செயலாளர்- நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் – மாநிலங்களவை கழக குழுத் தலைவர்
திருச்சி என்.சிவா.எம்.பி., பங்கேற்று பேசுகையில்,
தி.மு.க. கடந்து வந்த பாதைகள் மற்றும் காலை உணவுத் திட்டம், மகளிர் உதவித்தொகை இலவச பேருந்து பயணம், புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்ட தி.முக .அரசு வெற்றிகரமாக செயல்படுத்திக் கொண்டிருக்கக் கூடிய திட்டங்கள்.
அதன் பயன்கள் குறித்தும், இன்னும் 11 மாதங்களில் நாம் தேர்தலை சந்திக்க உள்ளதாகவும் அதற்கு முன்னதாக மக்களாகிய நீங்கள் அரசின் திட்டங்கள் குறித்து தெரிந்து கொண்டு இதற்கு மேலும் தொடர்ந்து பயன்கள் பெற எப்போதும் தி.மு.க.வுக்கு உறுதுணையாக இருக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
இதில், மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் தங்க.சித்தார்த்தன், குன்னம் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் ஏ.கே.அருண், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணைச் செயலாளர் பா.துரைசாமி, மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் குன்னம் சி.இராஜேந்திரன்,
மாநில பொறியாளர் அணி துணைச் செயலாளர் இரா.ப.பரமேஷ்குமார்,
தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என்.ராஜேந்திரன்,
பொதுக்குழு உறுப்பினர்கள் கி.முகுந்தன், செ.அண்ணாதுரை, பட்டுச் செல்வி ராஜேந்திரன், ஆர்.முருகேசன், அழகு.நீலமேகம், மாவட்ட அவைத்தலைவர் அ.நடராஜன்,
மாவட்ட துணைச் செயலாளர்கள் தழுதாழை சி.பாஸ்கர், நூருல்ஹிதா இஸ்மாயில்,சன்.சம்பத், மாவட்ட பொருளாளர் செ.ரவிச்சந்திரன்,
ஒன்றிய கழகச் செயலாளர்கள் என்.கிருஷ்ணமூர்த்தி, எம்.ராஜ்குமார், செ.நல்லதம்பி, தி.மதியழகன், சி.ராஜேந்திரன், ஒன்றிய கழக பொறுப்பாளர்கள் டாக்டர் செ.வல்லபன், ந.ஜெகதீஷ்வரன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் து.ஆதவன்(எ) ஹரிபாஸ்கர், மாவட்ட இளைஞர் அணி முன்னாள் அமைப்பாளர் கே.ஜி.மாரிக்கண்ணன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் அ.அப்துல்கரீம், டி.ஆர்.சிவசங்கர்,
வ.சுப்ரமணியன், ஆர்.அருண், மா.பிரபாகரன், மாவட்ட சிறுபான்மை அணி அமைப்பாளர் பாரி(எ)அப்துல்பாரூக், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் கவிஞர்.முத்தரசன், துணை அமைப்பாளர் கோவிந்தராஜன், மாவட்ட கலை இலக்கிய பேரவை அமைப்பாளர் ஆர்.சுந்தர்ராஜ், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் தங்க.கமல்,
அரும்பாவூர் பேரூர் கழகச் செயலாளர் ஆர்.ரவிச்சந்திரன், பூலாம்பாடி பேரூர் கழகச் செயலாளர் செல்வலெட்சுமி சேகர், லெப்பைக்குடிக்காடு பேரூர் கழக செயலாளர் ஏ.ஏஸ்.ஜாகிர்உசேன், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநர் அணி அமைப்பாளர் எம்.மணிவாசகம், மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் ஆர்.குமார்,
மற்றும் மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், முன்னாள் ,இன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நகர கழக பொருளாளர் முகமது அசாருதீன் நன்றியுரையாற்றினார்.