மதுரை தமிழ் திரை கலைஞர்கள் நலச்சங்கம் சார்பில் சங்க பொதுச் செயலாளர் கணகு தலைமையில் சின்னக் கலைவாணர் பத்ம ஶ்ரீ நகைச்சுவை நடிகர் விவேக் அவர்களின் 4ம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது.

நிகழ்வில் பொருளாளர் பி.டி.ஆர்.பழனிமுருகன், தலைமை பொறுப்பாளர் சிலம்பம் சாந்தி, துணைத் தலைவர் செல்வராஜ், நிர்வாக குழு துணைத் தலைவர் கண்ணன், திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர், செயற்குழு உறுப்பினர், மதுரை மாவட்ட பொறுப்பாளர், ஒளிப்பதிவாளர் பாண்டி, நடிகர் மீசை மனோகரன், மீசை அழகப்பன், சங்கரன் கோவில் முருகன், கவிஞர் அலங்கை ராஜேந்திரன், கெளதம், அன்னகாமு, திருப்புவனம் மணிகண்டன், சிவகவி, சீனிவாசன், பாண்டி, வைத்தீஸ்வரி, ரீனா, வழக்கறிஞர் ஷீலா, நடிகை புனிதா மன்மதன், சிவகாசி அமுதா மற்றும் நடிகர்கள், நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர். அனைவரும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். அனைவருக்கும் சிற்றுண்டியும், தேநீரும் வழங்கப்பட்டது.