விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை ஒன்றியம் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளராக ஏழாயிரம் பண்ணையை சேர்ந்த கிருஷ்ணகுமார் இருந்து வருகிறார்.
இவருடைய செல்போன் நம்பருக்கு அதிமுக முன்னாள் கிழக்கு ஒன்றிய செயலாளர் எதிர் கோட்டையைச் சேர்ந்த மணிகண்டன் போன் செய்து கலைஞர் கனவு இல்லம் திட்டம் சம்பந்தமாக வெம்பக்கோட்டை யூனியன் அலுவலகத்திற்கு வரக்கூடாது வந்தால் கொலை செய்து விடுவேன் என போனில் ஆபாசமாகவும் பேசி மிரட்டியதாக திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணகுமார் ஏழாயிரம் பண்ணை போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்துள்ளார்.

இதன் பேரில் ஏழாயிரம் பண்ணை இன்ஸ்பெக்டர் சங்கர், சப் இன்ஸ்பெக்டர் ஹரிராம், கொலை மிரட்டல் விடுத்த அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் மணிகண்டன் மீது வழக்கு பதிவு செய்து தலைமறைவான மணிகண்டனை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
ஆளும்கட்சியான திமுக ஒன்றிய செயலாளரை எதிர்க்கட்சி முன்னாள் ஒன்றிய செயலாளர் போனில் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் வெம்பக்கோட்டை ஒன்றியத்தில் பரபரப்பாகி வருகிறது.