புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ஊராட்சி ஒன்றியத்திற்கு கொண்ட பனையப்பட்டி மலையாலிங்கபுரம் தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நியாய விலைக் கடை கட்டிடம் அங்கன்வாடி கட்டிடம் உள்ளிட்ட பல்வேறு அரசு திட்டங்களை சட்டத்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார். அதன் பின்னர் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறும் போது:
கிராமங்கள் இந்த நான்காண்டு காலத்திலே பல்வேறு வளர்ச்சி திட்டங்களை பெற்றுள்ளன என்று சொன்னால் அது மிகையாகாது.
கிராமங்கள் வளர்ச்சி பெற வேண்டும் கிராமங்களின் முன்னேற்றத்தில் தான் நாட்டின் முன்னேற்றம் இருக்கின்றது என்பதை உணர்ந்தவர் தான் முதலமைச்சர் மு க ஸ்டாலின்.
அதனால்தான் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் முதலமைச்சரின் கிராம சாலைகள் திட்டம் போன்றவற்றை மூலமாக கிராமங்கள் தோறும் சாலைகள் முன்னேற்றம் கிராமங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்து இந்த நான்கு ஆண்டுகளில் எந்த அரசும் செய்ய முடியாத அளவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உடைய அரசு செய்திருக்கிறது.
குழந்தைகளுடைய நலனிலே அக்கறை உள்ள அரசாங்க முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அரசு இருக்கிறது. அதனால் தான் இன்றைக்கு அங்கன்வாடி கட்டிடம் தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது.
இந்த நான்கு ஆண்டுகளில் திருமயம் சட்டமன்ற தொகுதியில் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்திருக்கின்றோம்.
மக்களுக்கு என்ன தேவை என்பதை புரிந்து செயல்படுகின்ற அரசாக திமுக அரசு இருக்கின்றது ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப் போல இந்த செயல்கள் அமைந்திருக்கின்றன என்பதை நாங்கள் சொல்லிக்கொள்ள கடமைப்பட்டிருக்கின்றோம்.
10 ஆண்டுகளில் 2011 முதல் 2021 வரை ஆட்சியில் இருந்தவர்கள் பல்வேறு சாலைகளை புதுப்பிக்க தவறியதன் விளைவாகத்தான் இன்றைக்கு முதலமைச்சர் கிராம சாலைகள் என்ற திட்டத்தை கொண்டு வந்து அதன் மூலம் பல்வேறு கிராமங்களுக்கு சாலைகளை அமைத்து தந்திருக்கின்றோம். பணிகளை அவர்கள் விட்டு விட்டு சென்றாலும் அந்த பணிகளை தொடர்ந்து செய்கின்ற அரசாக முதலமைச்சர் ஸ்டாலினுடைய அரசு இருக்கின்றது.
மக்கள் நல திட்டங்களில் இந்தியாவிற்கே முன்னணி மாநிலமாக தமிழ்நாடு இருக்கின்றது மகளிர் இலவச பேருந்து பயண திட்டம் மூலம் ஒரு குடும்பத் தலைவிக்கு மாதம் ரூபாய் ஆயிரம் மிக்கப்படுகிறது. அந்த பணத்தை அவர்களால் சேமித்து வைக்க முடிகிறது.

மகளிர் உரிமை தொகை திட்டத்தின் மூலமாக ஒவ்வொரு குடும்பத் தலைவியும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது அதைப்போல அவருடைய குழந்தைகள் அரசு பள்ளியில் படித்து அரசு கல்லூரியில் சேர்ந்தால் அவர்களுக்கு புதுமைப் பெண் திட்டத்தின் திட்டத்தின் மூலமாக பெண் குழந்தைகளுக்கும் அதைப்போல தமிழ் புதல்வன் திட்டத்தின் மூலமாக ஆண் குழந்தைகளுக்கும் தனித்தனியே ஆயிரம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த திட்டங்கள் எல்லாம் வேறு எந்த மாநிலத்திலும் கிடையாது தமிழகத்தில் மட்டும் தான் இருக்கின்றது.
நம்முடைய மாணவர்கள் இன்றைக்கு உயர் படிப்பு படிக்க வேண்டும் என்பதற்காகத்தான் மேலும் அகில இந்திய அளவிலே உயர் படிப்பு படிப்பவர்களின் எண்ணிக்கை 28.1% என்று சொல்லுகிறார்கள் ஆனால் தமிழகத்தில் 50 சதவீதத்தை தாண்டி விட்டோம் ஏறக்குறைய 55 சதவீதம் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய மாணவ மாணவிகள் உயர்கல்வியை பெற்று வருகின்றனர். இந்திய சதவீதம் 2030ல் 50 பெற வேண்டும் என்ற இலக்கை ஆனால் நான் 2030ல் என்பது சதவீதம் என்கின்ற அளவிலே நம்முடைய உயர்கள் உடைய சதவீதம் உயர்ந்துவிடும் அந்த அளவுக்கு உயர் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கின்ற மாநிலமாக இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாடு இருக்கின்றது.
கல்வியாக இருந்தாலும் சரி மருத்துவமாக இருந்தாலும் சரி ஒவ்வொன்றிலும் முதலிடத்தை பெறுகின்ற மாநிலமாக தமிழ்நாடு இருக்கின்றது என்று சொல்லத்தக்க வகையிலே இந்தியாவிலேயே முதன்மை மாநிலம் என்று சொல்லத் தக்க வகையிலே தமிழ்நாடு முதலமைச்சர் இவற்றையெல்லாம் செய்து கொண்டிருக்கின்றார்.
வீடு தோறும் எந்த வீடும் இந்த ஆட்சியிலே பலன் பெறவில்லை என்று சொல்லத்தக்க வகையிலே இன்றைக்கு அத்தனை வீடுகளுக்கும் ஏதாவது ஒரு திட்டத்தின் மூலமாக ஏதாவது ஒரு பலன் நிச்சயம் கிடைத்திருக்கும்.
இன்றைய கிராமங்களில் இருக்கக்கூடிய பெண்கள் காலையிலே அவர்கள் வேலைக்கு செல்ல வேண்டிய காரணத்தால் தங்களுடைய குழந்தைகளுக்கு காலை உணவு கொடுக்க முடியாத சூழலில் இருந்தது அதனால் தான் முதலமைச்சர் மு க ஸ்டாலின் காலை உணவு திட்டம் என்ற ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தி அதன் மூலம் அனைத்து குழந்தைகளுக்கும் காலை உணவு திட்டத்தை உலகத்திலேயே முதன்முறையாக இந்தியாவிலேயே நமது தமிழகத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தந்திருக்கின்றார்.
காலை உணவு திட்டத்தை கனடா ஜெர்மன் போன்ற பல்வேறு நாடுகள் இந்த திட்டங்களை பின்பற்றுகின்றன என்று சொன்னால் உலகத்திற்கு வழிகாட்டியாக இருக்கின்ற திட்டங்களை முதலமைச்சர் மு க ஸ்டாலின் தந்திருக்கின்றார் என்று பேசினார்.