நாகப்பட்டினம் நகராட்சிக்கு உட்பட் 26 வார்டுகளுக்கு உட்பட்ட கல்லுக்காரதெரு,பாரதி மார்க்கெட்,கடைசல்கார தெரு காளியம்மன் கோவில் தெரு இப்பகுதியில் அதிகளவில் தனிநபர் ஆக்கிரமிப்புகள் செய்துள்ளதால் இந்தப் பகுதியில் உள்ள சாக்கடை கழிவுகள் செல்ல முடியாமல் தேங்கி காணப்படுகிறது.

மேலும் அதிகளவில் துர்நாற்றம் வீசுவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதாகவும் தூய்மைப் பணியாளர்கள் பணி செய்ய முடியாமலும் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி நிர்வாகம் உடனடியாக தனிநபர் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாக்கடை நீர் ஓடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என 26 ஆவது வார்டு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.