கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே செம்பளக்குறிச்சியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் நூற்றுக்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இந்த நிலையில் அந்த பள்ளியில் மாணவர்களுக்கு மதிய உணவு சமைப்பதற்காக பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், அப்பொழுது திடீரென்று சிலிண்டர் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்து எரிந்தது. அங்கிருந்த பொறுப்பாளர் சரிதா மற்றும் சத்துணவு சமையல் உதவியாளர் ஜெயக்கொடி மற்றும் அவரது மகன் செந்தமிழ் செல்வன் ஆகிய மூன்று பேரும் அங்கு சிலிண்டர் தீயை அணைக்க முயன்ற போது அந்த தீ அவர்கள் மீது பட்டுள்ளது. இதில் மூன்று பேரும் லேசான காயம் ஏற்பட்டு அவர்களை அங்கிருந்து அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர் விருத்தாசலம் மருத்துவமனையில் சரிதான் ஆகிய மூன்று பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது விருத்தாசலம் அருகே பள்ளியில் சத்துணவு மையத்தில் சிலிண்டர் கசிவால் பணியில் இருந்த இரண்டு பேர் மற்றும் அதை அணைக்க சென்ற வாலிபருக்கும் மூன்று பேருக்கும் தீக்காயம் ஏற்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.