வக்பு வாரிய திருத்த மசோதாவை திரும்ப பெறக் கோரி நி புதுக்கோட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை சின்னப்பா பூங்காவில், புதுக்கோட்டை மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் வெள்ளை நெஞ்சன், தமிழ்ச்செல்வன், இளமதி அசோகன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சிதம்பர நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளர் இரா.கிட்டு புதுக்கோட்டை மாவட்ட மண்டல செயலாளர் சதா.சிவகுமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.
மேலும், விடுதலை சிறுத்தை கட்சியின் மாநில பொறுப்பாளர்கள் கலைமுரசு, விடுதலை வேந்தன், செந்தமிழ் வளவன், கண்ணன், ஷாஜகான், சாமி அய்யா, கணேச பழனிவேல், கண்ணையன், சசிகலை வேந்தன், திருமறவன், சின்னபழகு மாவட்ட துணை செயலாளர்கள் திலீபன்ராஜா சந்திர பாண்டியன் பொருளாளர் பாவாணன் உள்ளிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில மாவட்ட ஒன்றிய நகர
முகாம் பொறுப்பாளர்கள் பங்கேற்று மத்திய அரசுக்கு எதிரான கண்டன கோஷங்களை எழுப்பினர்.
மேலும் இஸ்லாமியர் களி உரிமைகளை பறிக்கும் வக்பு வாரிய திருத்த மசோதாவை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநகரச் செயலாளர் அண்ணாதுரை ஏற்பாட்டில் இன்று நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திராவிட முன்னேற்ற கழகம் கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட இந்தியா கூட்டணியின் அனைத்து கட்சி மாவட்ட பிரதிநிதிகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.