தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் பேது பேசிய திருவாடனை சட்டமன்ற உறுப்பினர் கருமாணிக்கம், தொண்டி பகுதியில் பணிமனை அமைக்கும் செயக்குறிப்பு அரசிடம் உள்ளதா என்று கேள்வி எழுப்பினார்.
மேலும் பழைய பேருந்துகளை மாற்றி தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். மேலும், ஆண்களுக்கும் விடியல் பயணம் அளிக்கபடுமா என்று கேள்வி எழுப்பினார்,
இதற்கு பதில் அளித்த அமைச்சர் சிவசங்கர்,

தொண்டி பகுதியில் பணிமனை அமைக்கும் செயக்குறிப்பு அரசின் பரிசீலனையில் உள்ளதாக பதில் அளித்தார். மேலும், ஆண்களுக்கு இலவச பயணம் ஆர்வம் வரவேற்கத்தக்கது.
பெண்கள் ஒடுக்கப்பட்டவர்களாக இருந்தார்கள். இதனால் பெரியார் கொள்கைகளின் பெண்களை மேம்படுத்த இலவச பயணம் வழங்கப்படுகிறது. அரசின் நிதிநிலை சீராகும் பொழுது ஆண்களுக்கும் விடியல் பயணம் வழங்க பரிசீலிக்கப்படும் என்று பதில் அளித்தார்.