மயிலாடுதுறை. ஏப் 7, மயிலாடுதுறை லட்சுமிபுரம் மெயின் ரோடு அருகே அமைந்துள்ள யூரோ கிட்ஸ் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது இதனை முன்னிட்டு பெண்கள் முன்னேற்றம் சமூக மாற்றத்திற்கும் வலிமையான அடித்தளம் மகளிர் சக்தி விழிப்புணர் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பெண்களின் திறமை பெருமை மற்றும் சமூக பங்களிப்பு குறித்து மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்வில் சிறப்பு விருதினர்களாக வி.ருக்குமணி பிரியதர்ஷினி திருச்சி சிறப்பு பெண்கள் சிறை கண்காணிப்பாளர், டி.எஸ்.கே. மயூரிகண்ணன் பெருந்தலைவர் காமராஜ் அவர்களின் பேத்தி, தென்னிந்திய செய்தியாளர் மாநில சங்க தலைவர் ஆர். சந்திரிகா. மற்றும் தமிழகப் பெற்றோர் ஆசீரியர் சங்க தலைவர் தகவல்தொடர்பாளர் ஆகிய கலந்து கொண்டனர்
மேலும் தமிழ்திரைப்பட நடிகர்ஜீவாரவி. விஜய் டிவி புகழ் சூப்பர் சிங்கர் அருணா ரவீந்திரன், விழாவில் கலந்து கொண்டு தங்கள் அனுபவங்களை ஊக்கத்தையும் மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டனர் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் அவர்களின் சாதனைகள் மற்றும் சமத்துவத்தைப் பற்றிய கருத்துகளை நிகழ்ச்சியில் வலியுறுத்தி பேசப்பட்டன மாணவர்கள் பெண்களை மதிக்க வேண்டும் அவர்களின் முயற்சிகளை ஆதரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நிகழ்ச்சி முக்கிய கருத்தாக இருந்தது.

மாணவர்களின் உள்ளத்தில் பெண்களின் மகத்துவத்தை உணர்த்தும் வகையில் நடந்த இந்த நிகழ்ச்சி அனைவரிடமும் நல்ல வரவேற்பு பெற்றது பெண்கள் அனைத்து துறையிலும் வெற்றியை நோக்கி செல்ல அனைவரும் ஊக்கப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தை வளர்க்கும் ஒரு சிறப்பு நிகழ்வாக அமைந்தது. விழாவில் பள்ளி மாணவ மாணவிகள் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மேலும் பல்வேறு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் பாராட்டுகளும் வழங்கப்பட்டன. இதில் ஏராளமான பெற்றோர்களும் பள்ளி மாணவ மாணவிகளும் ஆசிரியை ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளியின் முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவிக்க விழா நிறைவு பெற்றது.