சாத்தூர் அருகே ஏழாயிரம்பண்ணையில் திமுக தெற்கு மாவட்டம் சார்பில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்திற்கு வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய அவைத்தலைவர் புஷ்பராஜ் தலைமை தாங்கினார். வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணகுமார் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெய பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் ஒன்றிய அரசு ஜிஎஸ்டி என்ற பெயரில் தொழில் நடத்துபவர்களையும் தொழிலாளர்களையும் மக்களையும் சுரண்டுவதாகவும் முன்னிலை கொள்கை என்ற பெயரில் இந்தி திணிப்பு செய்வதாகவும் குற்றம் சாட்டினார்.
மத்தியில் ஆளும் பிஜேபி அரசை எதிர்த்து துணிச்சலுடன் குரல் எழுப்பும் ஒரே முதலமைச்சர் நமது தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மட்டுமே என்றார். மேலும் தமிழகத்திற்கும் தமிழகப் பெண்களுக்கும் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருவதும் நமது தமிழக முதல்வர் அவர்களே என்றார்.

அமைச்சருக்கு பின்னர் திமுக கழக செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் தமிழன் பிரசன்னா கலந்துகொண்டு தமிழக அரசின் பல்வேறு நலத்திட்டங்களை பொதுமக்களுக்கு எடுத்துரைத்ததுடன் ஒன்றிய அரசின் மக்கள் விரோத செயல்பாட்டையும் சுட்டிக்காட்டினார். நிகழ்ச்சியில் வெம்பக்கோட்டை கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய பகுதிகளை சேர்ந்த கழக நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். தமிழக அரசின் பல்வேறு நலத்திட்டங்களை விளக்கி பேசுகையில் கொட்டும் மழையிலும் குடை பிடித்துக்கொண்டு பொதுமக்கள் பெண்கள் என ஏராளமான கலையாது ரசித்து அமர்ந்திருந்தனர்.