• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மாட்டு சந்தையில் சுங்கம் வசூலிப்பதில் முற்றுகையிட்டு வாக்குவாதம்..,

ByAnandakumar

Apr 5, 2025

கரூர் மாவட்டம், உப்பிடமங்கலத்தில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் மாட்டுச்சந்தை நடைபெற்று வருகிறது, இதில் கோவை, பொள்ளாச்சி, கரூர், எடப்பாடி என பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மாடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

இங்கு திருச்சி,புதுக்கோட்டை, சேலம், நாமக்கல், திண்டுக்கல் மற்றும் கேரளா போன்ற வெளி மாநிலங்களில் இருந்து மாடுகளை வாங்க அதிகளவு வியாபாரிகள் வருகின்றனர்.

இந்த மாட்டுச்சந்தையில் சிந்து, ஜெர்சி, நாட்டு மாடு போன்ற பல்வேறு வகையான கறவை மாடுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பேரூராட்சியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மீறி சுங்கம் அதிகம் வசூல் செய்வதாக கூறி வியாபாரிகள் சந்தை முன்புறம் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் பேச்சுவார்த்தை முடிவடையும் நேரத்தில் போலீசார் விவசாயிகளையும், வியாபாரிகளையும் வலுக்கட்டாயமாக வெளியேற்றியதால் தள்ளு முள்ளு ஏற்பட்டது.

மாட்டுச் சந்தையில் அதிக சுங்கம் வசூல் செய்வதாக குற்றச்சாட்டு தெரிவித்து, நடந்த போராட்டம் காரணமாக பிரச்சனை ஏற்பட்டதால் அப்பகுதியில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக பரபரப்பு ஏற்பட்டது.