உசிலம்பட்டியில் மின் நுகர்வோர்களின் குறை தீர்க்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் மின் நுகர்வோர்களின் குறை தீர்க்கும் சிறப்பு முகாம் இன்று செயற்பொறியாளர் பொருப்பு முத்துராசு தலைமையில், உதவி செயற்பொறியாளர் ரவிச்சந்திரன், செக்காணூரணி உதவி செயற்பொறியாளர் காசிலிங்கம் முன்னிலையில் நடைபெற்றது.
இதில் மின் கட்டணம், குறைந்த மின்னழுத்தம், சேதமடைந்த மின்கம்பம் மாற்றுதல் குறித்த புகார்களை தெரிவிக்க மின் நுகர்வோர்கள் ஏராளமனோர் கலந்து கொண்டு தெரிவித்தனர்.மேலும் புகார் மனுக்களை பெற்று புகார்களை கேட்டறிந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
