திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வேம்பார்பட்டி அருகே கே.அய்யாபட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இந்த கல்வியாண்டிற்கான புதிய மாணவர் சேர்க்கை நடைபெற்றது.

இந்நிலையில் புதிதாய் பள்ளியில் சேரும் மழலைகளை ஊக்கமளிக்கும் விதமாக அவர்களுக்கு மாலை அணிவித்து ஊருக்கு மத்தியில் உள்ள கலையரங்கத்திலிருந்து ஊர்வலமாக பள்ளிக்கு அழைத்துச் சென்றனர். மழலைகளை ஊர்வலமாக மரியாதையுடன் ஆசிரியர்கள் அழைத்துச் சென்ற காட்சியை கண்ட பொதுமக்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.
இதைத்தொடர்ந்து கடந்த கல்வியாண்டில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.அதைதொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.