குலசேகரப்பட்டினத்தில் அமையும் ராக்கெட் ஏவுதளத்தில் சிறிய ரக ராக்கெட்டுகள் தினமும் விண்ணில் செலுத்த வாய்ப்புகள் அதிகம் எனவும், ராக்கெட் தொழில்நுட்பத்தில் வரும் காலங்களில் விண்ணிற்கு மனிதனை செலுத்த தயாராகி வருகிறோம். முதல் கட்டமாக ஆளில்லா விண்கலத்தை செலுத்தி ஆய்வுகள் மேற்கொள்ள உள்ளோம் எனவும், ககன்யான் திட்டமே மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ஆராய்ச்சியின் அடிப்படையில் தான் தற்போது ஆளில்லா விண்கலம் மூலம் ஆய்வுகள் செய்ய தயாராகி உள்ளோம் எனவும், வருங்காலங்களில் இந்தியர்கள் விண்ணுக்கு செல்ல தயராகி உள்ளோம் என மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.
மதுரை தியாகராஜ பொறியியல் கல்லூரியின் 67வது ஆண்டு விழாவில் இஸ்ரோ முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை சிறப்பு உறுப்பினராக கலந்து கொண்டார்.
மதுரை தியாகராஜா பொறியியல் கல்லூரி 67வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் கல்லூரி தலைவர் ஹரி தியாகராஜன் தலைமை வகித்தார். முதல்வர் அசோக்குமார் வரவேற்புரை கூறினார்.
விழாவில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் இஸ்ரோ தலைவர் மயில்சாமி அண்ணாதுரை கூறுவையில்..,
வாய்ப்புகள் கிடைக்கும் போது, அவற்றை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், வினோத் காம்பிலி இருவரும் நண்பர்கள் சிறு வயதில் இருந்தே கிரிக்கெட்டில் பல சாதனை புரிந்தவர்கள். இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற்றவர்கள்.
வினோத் காம்பிலி 14 வதுபோட்டியில் சதம் அடித்து ஆயிரம் ரன்னை கடந்தவர். ஆனால் சச்சின் டெண்டுல்கர் 24 வது போட்டியில் தான் ஆயிரம் கண்ணை கடந்தார். பின்னால் தொடர்ந்து பல சதங்களை அடித்து கிரிக்கெட் வரலாற்றில் இடம் பிடித்தார். அதே போலத்தான் உங்களுக்கான வாய்ப்புகள் கிடைக்கும் வரை காத்திருந்து அதில் சாதனை புரியுங்கள் தற்போது ராக்கெட் தொழில்நுட்பத்துறையில் பல்வேறு வாய்ப்புகள் உள்ளது. சாதனை புரிய நவீன தொழில்நுட்பத் துறையும் உதவிகரமாக உள்ளது ஆகையால் வாய்ப்புகளை பயன்படுத்துங்கள் என கூறினார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது..,
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியின் 67வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டேன். பல பேராசிரியர்கள் மாணவர்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. இங்கு மாணவர்கள் பல்வேறு அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு, தார் ரோடு அமைக்கும் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
குலசேகரபட்டினம் ராக்கெட் ஏவுதளம் எப்போது செயல்படும்?
குலசேகரபட்டினம் ராக்கெட் ஏவுதளம் பணிகள் விரைவாக நடைபெறுகிறது. அங்கு ராக்கெட் விண்ணில் ஏதுவதற்கான இட வசதி தண்ணீர் தொழில்நுட்ப வசதி மின்சாரம் செய்தி பரிமாற்றம் போன்றவை தடை இல்லாமல் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அதிகபட்சமாக ஒன்றரை வருடங்களில் பணி முடிந்து சிறிய ரக ராக்கெட்கள் குலசேகரப்பட்டினத்தில் இருந்து ஏவ முடியும். ஹரி கோட்டா போன்ற ராக்கெட் ஏவுதலங்களில் மிகப்பெரிய ராக்கெட் மட்டுமே செலுத்த முடியும். ஆனால் குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் உருவானால் தினமும் விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் செலுத்துவது போல் இங்கிருந்து தினமும் ஒன்றோ அல்லது அதற்கு மேற்பட்ட ராக்கெட்டுகளையும் செலுத்த முடியும். மேலும் தனியார் கூட்டமைப்பில் நவீன தொழில்நுட்ப வசதிக்காக ஏவுகலன் களையும் செலுத்த அதிக வாய்ப்புகள் உள்ளது. மொபைல் லான்சர் போன்று ராக்கெட் ஏவ முடியும்.

புவியின் வட்டபாதையில் ராக்கெட் செலுத்த இடம் சரியானதா? இந்த இடம் மிக முக்கியமான இடம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏற்கனவே அனுப்பி உள்ளோம் அங்கிருந்து அனுப்பப்படும் பாக்கியத்தை திசை மாறி அனுப்பினால் நிறைய எரிபொருள் செலவாகும். ஆனால் குலசேகரப்பட்டினத்தில் இருந்து ராக்கெட் ஏவுகலன்கள் செலுத்துவதற்கு ஏதுவானதாக இருக்கும் எந்த எரிபொருளும் சேதாரம் அவருக்கு வாய்ப்பு இல்லை. சிறிய ஏவுகலன்களை இங்கிருந்து அனுப்ப முடியும். இதுவரை பல ஆயிரம் சேர்க்கை கோள் அனுப்பியுள்ளோம். தற்போது வரும் காலங்களில் தினமும் ஒன்று இரண்டு அனுப்ப முடியும் ஏவுகலன்செலுத்துவதில் ஏற்படும் தாமதங்களால் குறைபாடுகளையும் உடனடியாக சரி செய்ய முடியும். குலசேகரப்பட்டினம் இடம்தான் நமக்கு மிகவும் சிறப்பானதாக அமைந்தது.
தேவையான குறைந்தபட்ச வசதிகளை கொண்டு கூட ராக்கெட் களை அனுப்ப முடியும்.
சுனிதா வில்லியம்ஸ் இந்தியா வரும்போது இஸ்ரோவிற்கு வர வாய்ப்புள்ளதா என்ற கேள்வி..,
சுனிதா வில்லியம்ஸ் இந்தியா வருவதுது பற்றி கூறியுள்ளார்கள் இஸ்ரோ வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இந்தியாவினுடைய அடுத்த கட்ட முயற்சிகளுக்கு அவர்களும் ஒத்துழைப்பார்கள்.
மகேந்திர கிரியில் அமைக்கப்பட்ட எரிந்து உந்து கலன்கள் குறித்த கேள்விக்கு..,
மத்திய அரசு ஏவுகணை தளத்திற்கான அனுமதி தமிழக அரசு 2 ஆயிரம் ஏக்க நிலம் வழங்கி அனுமதி அளித்துள்ளது. சிறிய வகை ராக்கெட் சிறிய வகை ரக ஏவுகலன் தயாரிக்கும் போது அங்கேயேஎரிபொருளையும் உற்பத்தி செத்தால் மட்டுமே திட்ட செலவுகள் குறையும். ஸ்ரீஹரிக்கோட்டாவில் மற்ற வகையில் பிரச்சனைகள். ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எரிகலன்கள் ஆகவற்றைக் கொண்டு செல்ல வேண்டும்.

தினம் தினம் அனுப்பும் போது எரிகலன்கள் வேறு இடத்தில் இருந்து கொண்டு வர முடியாது. ஆனால் குலசேகரபட்டினத்தில் அப்படி இல்லை ஒரே இடத்தில் அனைத்து வசதிகளும் உருவாக்கி வைத்தால் அதிக வேலை வாய்ப்புகள் உருவாகும்.
எரிகலன்களை இங்கே உருவாக்கினால் நேரம், செலவுகள் குறையும். ஏவுகலன் உற்பத்தி, எரிபொருள் போன்ற உருவாக்க பல தரப்பட்ட வேலை வாய்புகள் உருவாகும்.
மாணவர்கள் ராக்கெட் தொழில்பத்தில் ஆர்வம் குறித்த கேள்விக்கு?
எரிபொருள் சிக்கனமாக அனுப்ப முடியும் சிறிய ரக ஏவுகாலங்கள் செலுத்த முடியும். அந்த வகையில் தேவையான அளவு உள்கட்ட அமைப்புகள் சாலை போக்குவரத்து மின்சாரம் செய்தி பரிமாற்றம் ஆகியவை அடங்கிய தலமாக இருந்தால் தனியார் துறையில் மொபைல் லாஞ்சராக இருந்தால் கூட பயன்படுத்த முடியும்.
அதிகமாக சொல்வது என்னவென்றால் இளைஞர்களே அதிகமாக வர வேண்டும். தொழில் முனைவராக உருவாக வேண்டும் என்ற செயல்பாடு தான் இப்போது உள்ளது அதற்கான வாய்ப்பாடுகள் உதிரிபாகங்கள் நிறைய செயற்கை கோள் மற்றும் நிறைய உதிரிபாகங்கள் செய்ய பலதரப்பட்ட வாய்புகளை இளைஞர்கள் செய்ய முடியும்.
நம்முடைய ராக்கெட் ஆராய்ச்சியில் மனிதனை விண்ணுக்கு அனுப்பும் முயற்சி?
பகல் கண் திட்டமே அதற்கு முன்மாதிரிதான் அதற்காக ஆய்வுகள் நடைபெற்று வருகிறது தற்போது ஆளில்லா விண்கலம் மூலம் விண்வெளி மையத்தில் ஆய்வுகள் நடைபெற தயாராகி வருகிறோம் சுனிதா வில்லியம்ஸ் செல்வதற்கு முன்பு கூட ஆளில்லா விண்கலம் தான் முதலில் சென்று வந்தது வரும் காலங்களில் விண்வெளிக்கு இந்தியர்கள் செல்ல வாய்ப்புகள் அதிகம் என மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.