• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

100 ஏக்கர் பரப்பளவில் குளம் தூர்வாருகிற பணி மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா..,

ByKalamegam Viswanathan

Apr 1, 2025

ரோட்டரி அமைப்பின் மூலம் மதுரை அருகே கீழ கோயில் குடியில் 100 ஏக்கர் பரப்பளவில் குளத்தை தூர்வருகிற பணியினை மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

மதுரை ஸ்டார் ரோட்டரி சங்கம் மதுரை கிளாசிக் ரோட்டரி சங்கம் இணைந்து இந்த பணியை தொடங்கியுள்ளார்கள். மும்பை எம்பி தப்பாரியா பவுண்டேஷன் மற்றும் ரோட்டரி மதுரை மிட் டவுன் கம்யூனிட்டி டிரஸ்ட் திருப்பணியில் உதவி இருக்கிறார்கள்.

ரூபாய் 10 லட்சம் மதிப்பீட்டில் 100 ஏக்கர் பரப்பளவு உள்ள கீழக்குயில்குடியில் உள்ள குளத்தை தூர் வாருகிற பணிக்கான தொடக்க விழா இன்று நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு போற்றி மாவட்டம் 3000 ஆளுநர் ராஜா கோவிந்தசாமி தலைமை தாங்கினார்.

கீழக்குயில் குடி பஞ்சாயத்து தலைவர்காசி ரோட்டரி மாவட்ட சேவை திட்டம் செயலாளர் சசி ஹோம்புரா மதுரை ஸ்டார் ரோட்டரி சங்கத் தலைவர் வாசுதேவன் செயலாளர் பாலசுப்பிரமணியன் மதுரை கிளாசிக் ரோட்டரி சங்க தலைவர் செந்தில்குமார் செயலாளர் செல்வரமேஷ்ஆடிட்டர் சேது மாதவா,உதவி ஆளுநர் மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா தொடங்கி வைத்தார்.

நிகழ்வில் ரோட்டரி மாவட்டம் 3000 ஆளுநர் பேராசிரியர் ராஜா கோவிந்தசாமி.ரோட்டரி மாவட்ட செயலாளர் சேவை திட்டம் சசி ஃபோம்ரா, கீழக்குயில் குடி பஞ்சாயத்து தலைவர் காசி ரவி மதுரை ஸ்டார் ரோட்டரி சங்கத் தலைவர் வாசுதேவன் செயலாளர் பாலசுப்பிரமணியன் மதுரை கிளாசிக் ரோட்டரி சங்கத் தலைவர் .

செந்தில்குமார் செயலாளர் செல்வ ரமேஷ்,உதவிஆளுநர்ராஜேஷ் கண்ணா ஓய்வு பெற்ற நீதிபதி மாயாண்டி பொன். ரவிச்சந்திரன்,மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்கத் தலைவர் நெல்லை பாலுஉட்பட பலர் பங்கேற்றனர். குளம் தூர் வாருகிற பணி ஓராண்டுக்குள் நிறைவு பெறும் என்று சசிபோம்ரா தெரிவித்தார்.