மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 வது அகில இந்திய மாநாடு மதுரையில் ஏப்ரல் 2 ம் தேதி தொடங்கி 6 ம் தேதிவரை நடைப்பெற உள்ளது. மாநாட்டில் ஏற்றப்படக் கூடிய கொடியானது நாகை மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த கீழவெண்மணியில் நில ஆதிக்க சக்திகளால் எரித்து கொலைச் செய்யப்பட்ட 44 வீரத்தியாகிகள் நினைவாக ஏற்றப்பட உள்ளது. இதற்கான கொடிப்பயணம் நிகழ்ச்சி கீழவெண்மணி தியகிகள் நினைவிடத்தில் இருந்து இன்று தொடங்கியது.

சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி தலைமையில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் வெண்மணி தியாகிகள் நினைவிடத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மாலையிட்டு அஞ்சலி செலுத்தி வீரவணக்கம் செலுத்தினர். தொடர்ந்து வெண்மணி தியாகிகள் நினைவு மாநாட்டு கொடியினை மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகியிடம் வழங்கினார். கொடியானது அலங்கரிக்கப்பட்ட வாகனம் மூலம் செந்தொண்டர் அணிவகுப்போடு மதுரைக்கு புறப்பட்டது.