துபாயில் நடைபெற்ற சர்வதேச அளவிலான மாணவர்களின் தனித் திறன் வெளிப்படுத்தும் அபாகஸ் போட்டியில் மதுரை மாணவர்கள் 14 பேர் சாம்பியன்ஷிப் பட்டம் பெற்றுள்ளனர்.
உலக அளவில் 47 நாடுகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்ற போட்டியில், ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்றனர். துபாயிலும், ஆன்லைன் வழியாகவும் இந்தப் போட்டிகள் நடத்தப்பட்டன.

மாணவர்களின் கணிதத் திறமையை அதிகரித்தல், மூளை வளர்ச்சியை தூண்டுதல், தன்னம்பிக்கையோடு செயல்படுதல், கவனத்தோடும் சுறுசுறுப்போடும் வளரும் திறமையை ஊக்குவிக்கும் விதமாக இந்தப் போட்டிகள் நடத்தப்பட்டன.
மூன்று முதல் 14 வயதுக்குட்போருக்கான போட்டியில், மதுரை சிக்கந்தர்சாவடி துளிர் அகாடமி சார்பில் 14 மாணவர்கள் கலந்து கொண்டனர். ‘பிரய்ன் ஓ பிரய்ன்’ பயிற்சியாளர் ஜெனிபர் முத்துக்குமாரிடம் பயிற்சி பெற்ற மாணவர்கள் 14 பேரும் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றனர்.
மாணவர்களுக்கு பரிசளிக்கும் நிகழ்வில், பாரதி யுவகேந்திரா நிறுவனர் நெல்லை பாலு, அனியம் அறக்கட்டளை நிறுவனர் அழகு ஜெகன், எழுத்தாளர் சி.எம்.ஆதவன், துளிர் அகாடமி நிறுவனர் ஆர்.முத்துக்குமார் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினர்.
நிகழ்வில் பள்ளி மாணவ மாணவிகளின் தனித்திறனை வெளிப்படுத்தும் விதமாக பாட்டு நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. மாணவர்களை ஊக்குவித்த பெற்றோர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. பிரய்ன் ஓ பிரய்ன் பயிற்சியாளர் ஜெனிபர், ஆசிரியர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர் .