மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே செங்கப்படை கிராமத்தில் , 40 ஆண்டுகளாக தொழில் நடத்தி வரும் சுந்தரி மற்றும் சசிகலா ஆகிய இரு பெண்மணிகள்,
ஜீனி வைத்து சீரணி மிட்டாய் தயாரித்து வருகின்றனர். இதில் எந்த விட கலப்படம் இல்லாததால் உடல் நலத்திற்கு எந்த தீங்கும் இல்லை .

இதனை வாங்கி சுவைப்பதற்கு மதுரை மட்டுமின்றி, சுற்றுப்புற கிராமங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் அனுப்பப்படுவதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் என்றால் பால்கோவா நினைவுக்கு வருவது போல் திருமங்கலம் என்றவுடன் சீரணி மிட்டாய் தான் நினைவுக்கு வரும் என இப்பெண்கள் பெருமிதத்துடன் தெரிவித்தனர்.
சீரணி மிட்டாய் பார்ப்பதற்கு ஜிலேபி போல் காட்சி அளித்தாலும் , அதனை உண்பதால் பெரிதும் இனிப்பு சுவையை அடைய முடிகிறது எனவும் தயாரிப்பாளர்கள் தெரிவித்தனர்.








