உசிலம்பட்டி அருகே தோட்டத்தில் கட்டி வைத்திருந்த ஆடுகளை நாய்கள் கடித்து கொன்ற கொடூரம் – 5 ஆடுகள் உயிரிழப்பு , 2 ஆடுகள் படுகாயமடைந்த சோகம் – சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சில்லாம்பட்டி – புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் ராஜேஷ் என்பவர், தனது தோட்டத்தில் 17 ஆடுகள், 13 மாடுகள் மற்றும் 50க்கும் மேற்பட்ட கோழிகளை வைத்து வளர்த்து வருகிறார்.,

இந்நிலையில் நேற்று இரவு தோட்டத்திற்கு வந்த இரு நாய்கள் தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த 5 ஆடுகளை கடித்து கொன்றது, மேலும் 2 ஆடுகள் படுகாயமடைந்த சூழலில் அவைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.,
தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி தாலுகா காவல் நிலைய போலீசார் ஆடுகளை கடித்து கொன்ற நாய்கள் குறித்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.,
மேலும் தோட்டத்தில் இருந்த சிசிடிவி-யை ஆய்வு செய்த போலீசாருக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் தோட்டத்திற்கு வந்த நாய்கள் ஆடுகளை கடித்து கொன்று திண்ணும் காட்சிகள் பதிவாகி இருந்தன, இந்த காட்சிகள் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.,











; ?>)
; ?>)
; ?>)