தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெடுவதற்கு அரசு மதுபான கடை முக்கிய காரணம், அதனைக் கண்டித்து பாரதியார் ஜனதா கட்சியினர் ஜனநாயக முறைப்படி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களை கைது செய்த பின்னர் மண்டபத்தில் தங்க வைத்து மாலை 6:00 மணிக்கு மேல் விடுவிக்க வேண்டும். ஆனால் ஆண்கள் பெண்கள் உள்ளிட்ட பாரதியார் கட்சியினரை ஆறு மணிக்கு விடுவிக்காமல் இனி போராட்ட களத்திற்கு செல்லாத அளவிற்கு காவல் துறையினர் கடுமையான முறையில் நடந்து கொண்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

தமிழக அரசு படிப்படியாக டாஸ்மார்க் கடைகளை குறைக்கப்படும் என தெரிவித்து இதுவரை அதற்கான நடவடிக்கை எடுக்க அதன் காரணம் அதனால்தான் போராட்ட களத்தில் இறங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு சர்வாதிகாரத்தனத்தை கைவிட்டு படிப்படியாக டாஸ்மார்க் கடைகளை குறைப்பதோடு நிரந்தரமாக மூட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அடுத்த கட்டமாக தமிழக முதல்வரின் புகைப்படத்தை டாஸ்மார்க் கடைகளில் வைப்போம் என தெரிவித்துள்ளார். அதைப்போல் போராட்டங்களை கையில் எடுப்பது தமிழக அரசுக்கு நல்லதா என கேள்வி எழுப்பியவர். இதன் பிரதாவது தமிழக மக்களின் நலன் கருதி அரசு மதுபான கடைக்கு நிரந்தர தீர்வு எடுக்க வேண்டும் என தமிழக முக்குலத்தோர் புலிகள் கட்சியின் நிறுவனர் ஆறு சரவணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.