ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசன் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடர் வரும் 22-ம் தேதி தொடங்குகிறது.
கொல்கத்தாவில் நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
அடுத்த நாளில் ஐ.பி.எல் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் சென்னை – மும்பை அணிகள் மோதும் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 23-ந் தேதி நடக்கிறது.இதற்காக முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் மகேந்திர சிங் தோனி ஏற்கனவே சென்னை வந்து விட்டு பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்,மேலும் சில சென்னை அணி வீரர்கள் ஏற்கனவே சென்னை வந்து விட்டு பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்,
இந்தநிலையில் சூரியகுமார் யாதவ் தலமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி தற்போது மும்பையில் இருந்து விமான மூலம் சென்னை விமான நிலையம் வந்துள்ளனர், மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு முதல் போட்டியில் விளையாட தடை விதித்துள்ளதால் சூரியகுமார் யாதவ் தலைமையில் மும்பை இந்தியன் அணி சென்னை வந்துள்ளது இதில் அனைத்து ரோகித் சர்மா உட்பட அனைத்து வீர்களும் வருகை தந்துள்ளனர்,
சென்னை வந்துள்ள மும்பை இந்தியன்ஸ் கிரிக்கெட் அணி வீரர்களை தமிழ்நாடு கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் வரவேற்று சொகுசு பேருந்துகள் மூலம் சென்னையில் உள்ள நட்சத்திர விடுதிகளுக்கு அழைத்துச் சென்றனர் மேலும் நாளை முதல் அவர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வரும் 23ஆம் தேதி சென்னை சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளனர்.