மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடு துறையை அடுத்த குளிச்சார் கிராமத்தில தருமபுர ஆதினத்திற்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது அந்த நிலத்தை மூன்று தலைமுறைகளாக அங்குள்ள விவசாயிகள் ஆதினத்தில் குத்தகை செலுத்தி விவசாயம் செய்து வந்தனர். ஆனால் தருமபுர ஆதினம் அந்த விவசாய நிலத்தை தனியாருக்கு விற்க முயற்சிப்பதை அறிந்த விவசாயிகள் பத்து மாதத்திற்கு முன்பு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியராக இருந்த மகாபாரதியிடம் மனு கொடுத்து உள்ளனர்.

ஆனால் மாவட்ட நிர்வாகம் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை இதனால் தற்போது அந்த இடத்தை வாங்கி விட்டதாக தனியார் ஒருவர் அந்த இடத்தை சுற்று வேலி அமைக்க முயற்சித்து உள்ளார் இதனை கண்டித்து அந்த நிலத்தில் தலைமுறை தலைமுறையாக விவசாயம் செய்து வந்த குத்தகை விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் மயிலாடுதுறை To வடகரை சாலையில் போக்குவரத்து ஒரு மணி நேரம் பாதிக்கபட்டது செம்பனார் கோயில் காவல் துறையினர் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதால் சாலை மறியல் கைவிடப்பட்டது