ராணுவத்தில் தந்தை இறந்த சோகத்திலும் தேர்வு எழுதிய மாணவன். சத்தீஸ்கர் மாநிலத்தில் எல்லை பாதுகாப்பு படை வீரராக பணியாற்றிய சிவகாசி ஸ்டேட் பேங்க் காலனியை சேர்ந்த பரமசிவம் பணியின் போது நேற்று மாரடைப்பால் காலமானார். அவரது மகன் தர்ஷன் தனது தந்தை மறைந்த துயர நிலையிலும் இன்று +1 பொதுத்தேர்வு எழுதியுள்ளார். தந்தை மறைந்த நிலையில் அவரது கனவை நினைவாக்கும் வகையில் கல்வியில் சிறந்து தாமும் ராணுவ வீரராக பணியாற்றுவேன் என மாணவன் தர்ஷன் உறுதியேற்றுள்ளார்.