கஞ்சா விற்பனை செய்த ஐந்து பேர் கைது சிவகாசி அருகே திருத்தங்கல் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக தொடர்ந்து போலீசாருக்கு புகார் வந்ததன் பேரில் போலீசார் மாறுவேடத்தில் விசாரணை நடத்தி வந்தனர். புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபுரத்தை சேர்ந்த வீரபாண்டி (வயது 24), மணிகண்டன் (வயது 27) மற்றும் திருத்தங்கல்லை சேர்ந்த வேலுச்சாமி (வயது30) மூன்று பேரையும் சோதனை நடத்தியதில் விற்பனை செய்வதற்கு வைத்திருந்த ஒன்றரை கிலோ கஞ்சாவை திருத்தங்கல் போலீசார் கைப்பற்றி மூன்று பேரையும் கைது செய்தனர்.

சிவகாசி அருகே தாயில்பட்டி அரசு பள்ளிக்கூடம் அருகே சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த இருவர்களை வெம்பக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தினர். முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் சந்தேகம் அடைந்த போலீசார் பையில் வைத்திருந்த கஞ்சா 250 கிராமினை போலீசார் பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தியதில் தாயில்பட்டி இந்திர நகரைச் சேர்ந்த கருப்பசாமி (34 )மற்றும் 16 வயது சிறுவனையும் கைது செய்தனர். மேலும் உடந்தையாக இருந்த தாயில்பட்டியை சேர்ந்த ஆனந்தராஜ், கோட்டையூரை சேர்ந்த வேல் துரை கீழத்தாயில்பட்டியை சேர்ந்த கருப்பசாமி ஆகியோரையும் போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர்.