• Sat. Jan 3rd, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ககன்யான் திட்டத்திற்கு பயிற்சி கொடுக்கும் இந்தியா

Byவிஷா

Mar 20, 2025

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கு இந்தியா பயிற்சி அளித்து வருகிறது.
விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் “ககன்யான்” திட்டத்திற்கு கடுமையான பயிற்சி பெற்று வரும் நான்கு விண்வெளி வீரர்களில், ஒருவரான குரூப் கேப்டன் சுக்லா, சர்வதேச விண்வெளி நிலையத்திற்கான பணியில் சேர தேர்வு செய்யப்பட்டுள்ளார். சந்திரயான் -4, 2040-ம் ஆண்டு நிலவு பயணத்தை இந்தியா நோக்கமாகக் கொண்டிருப்பதால் இதில் தொழில்நுட்பம் முன்னோடியாக இருக்கும் என மத்திய விண்வெளித்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த அவர், பல மேம்பட்ட தொழில்நுட்பங்கள், சந்திர மாதிரி சேகரிப்பு ஆகியவற்றை இத்திட்டம் கொண்டிருக்கும் என்றார். இந்தப் பணி, 2040 க்குள் தனது சொந்த விண்வெளி நிலையத்தை நிறுவுவதற்கான இந்தியாவின் இலக்கை நோக்கிய ஒரு முக்கிய படியாக இருக்கும் என அவர் கூறினார். இந்தியாவின் விண்வெளி திறன்களை வலுப்படுத்துவதில் சந்திரயான் -4 இன் முக்கியத்துவத்தை டாக்டர் ஜிதேந்திர சிங் எடுத்துரைத்தார். “இந்த பணி சந்திரனில் தரையிறங்குவது மட்டுமல்லாமல், எதிர்காலப் பயணங்கள், விண்வெளி நிலைய நடவடிக்கைகளுக்கான முன்னோடியாக இருக்கும் என்றார்.