பல்லடம் அருகே சாலையை கடக்க முயன்ற போது விபத்தில் சிக்கிய மானை மீட்டு தீயணைப்புத் துறையினர் சிகிச்சைக்கு கொண்டு சென்றனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே குங்குமம்பாளையம் பிரிவு பகுதியில் மான் ஒன்று வழித்தவறி ஊருக்குள் பல்லடம் திருப்பூர் சாலையை மான் கடக்க முயன்றபோது திடீரென சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி மானின் தலை மற்றும் கால் பகுதிகளில் காயம் ஏற்பட்டது.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த துடி துடித்துக் கொண்டிருந்த மானை கண்ட அப்பகுதியினர் பல்லடம் தீயணைப்புதுறைக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறை மற்றும் தீயணைப்பு துறை என விரைந்து சென்று விபத்தில் சிக்கிய மானை மீட்டு வடுகபாளையம் கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருகின்றனர்.





