நாகர்கோவில் புதிதாக கட்டப்பட்டுள்ள வருமான வரி சேவை மையத்தின் புதிய கட்டிடத்தை நடிகர் வடிவேலு திறந்து வைத்தார். இந்த நிகழ்வில்.

வருமான வரி உதவி ஆணையர் வேணுகுமார் தலைமை தாங்கினார்.வருமான வரி முதன்மை ஆணையர் சஞ்சாய்ராய்,தலைமை ஆணையர் வசந்தன் ஆகியோர் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் புதிய அலுவலக கட்டிடத்தை நடிகர் வடிவேலு திறந்து வைத்தார். நிகழ்வில் நகைச்சுவை உடன் பேசிய நடிகர் எம்ஜிஆர் பாடலையும் பாடியது டன்,வருமான வரித்துறை அதிகாரி ஒருவருடன் நகைசுவை காட்சியையும் நடித்து காண்பித்தார்.
வடிவேலுவின் மேடை பேச்சில். வரிகட்டுவது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும். வரி கட்டுவதால் நாடும்,நாட்டு மக்களும் முன்னேற்றம் அடையும்.வாழ்க்கையில் தோல்வி என்பது சகஜம். திரைப்படங்களில் வெற்றி,தோல்வி என்பது தவிர்க்க முடியாத ஒன்று.திரைப்படத்தை காண திரையரங்குக்கு வருபவர்களை கவலையை மறந்து சிரிக்க வைப்பது ஒரு நகைச்சுவை நடிகனின் நடிப்பின் ஆற்றல்.

குமரி மண்ணின் மைந்தன் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் படங்களில் நகைச்சுவை கலந்த சிந்தனையை மக்கள் மத்தியில் கொண்டு சென்றவர்.அந்த உயர்ந்த கலைமகன் கலைவாணர் நடந்த நாகர்கோவில் மண்ணில் இன்று நான் என் பாதங்களை பதிக்க, இந்த வருமான வரி துறையின் உயர் அதிகாரிகள் உதவி செய்துள்ளார்கள் அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் நடித்த கேங்ஸ்டார் மற்றும் இரண்டு படங்கள் விரைவில் திரைக்கு வர தயாராக உள்ளது. இந்த படங்களை குடும்பத்தோடு பார்த்து சிரிக்கலாம்.
எனது வளர்ச்சிக்கு “மீம்ஸ்” கிரியேட்டிவ் கருத்து ஒரு முக்கிய பங்கு உண்டு.
நான் பங்கேற்றுள்ள இந்த விழாவில் அரசியல் பற்றிய எந்த கருத்தும் சொல்ல விரும்பவில்லை. என்னை இந்த வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு எந்த சங்கடத்தையும் ஏற்படுத்தி விடக்கூடாது. அரசியல் கருத்துக்களை சொல்லும் இடமும் இதுவல்ல என தெரிவித்தார்.
வடிவேலு மேடை பேச்சின் இடையை வருமான துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க எம்ஜிஆர் நடித்த படத்தின் ஒரு பாடலைப் பாடியது டன். திரைப்படத்தில் அவர் நடித்த ஒரு நகைச்சுவை காட்சியை வருமானம் துறை அதிகாரி ஒருவர் உடன் இணைந்து நடித்து காண்பித்தார்.