• Fri. Dec 19th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

வணிக நிறுவனங்கள் தமிழில்பெயர் பலகை வைக்க முதல் அமைச்சர் ரங்கசாமி அறிவுறுத்தல்..

ByB. Sakthivel

Mar 18, 2025

புதுச்சேரி சட்டசபையில்தாய்மொழியான தமிழுக்கு முக்கியத்துவம் அளிப்பது குறித்து சுயேட்சை எம்எல்ஏ நேரு எழுப்பிய கேள்விக்கு முதல் அமைச்சர் ரங்கசாமி பதிலளிக்கையில், புதுச்சேரியில் உள்ள வணிக நிறுவனங்கள் தங்களது பெயர் பலகையில், தமிழ் எழுத்து இருப்பது கட்டாயம். தமிழ் பெயர் கட்டாயம் இருக்க வேண்டும், எழுத வேண்டும். வணிகர்கள், வியாபாரிகள் தங்களது கடை பெயர் பலகையில் தமிழ் எழுத வேண்டும்.

ஏற்கனவே இதற்கான உத்தரவு அமலில் உள்ளது. தமிழ் என்பது ஒரு நமது உணர்வு.தானாக வர வேண்டும் என்றார். இதைப்போல் அரசு விழா அழைப்பிதழ்களையும் தமிழில்தான் அச்சடிக்க வேண்டும் என ரங்கசாமி தெரிவித்தார்.