• Sat. Dec 27th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ஆளுங்கட்சியை எதிர்த்து போராடுபவர்கள் கைது செய்யப்படுவது காலங்காலமாக நடைபெறும் வழக்கம்..,

ByKalamegam Viswanathan

Mar 17, 2025

மதுரையில் இருந்து சென்னை செல்வதற்காக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மதுரை விமான நிலையம் அடைந்தார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பு.

நேற்று பழனி ஆண்டவரை தரிசித்து ராஜா அலங்காரம் பார்த்து இன்று சென்னை செல்வதற்காக வந்துள்ளேன்.

தமிழக பட்ஜெட் குறித்த தேமுதிக நிலை ?
2006இல் தேமுதிக தேர்தல் அறிக்கையில் வந்த திட்டங்களை தான் தமிழக பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்கள் அதை வரவேற்கிறோம்.

மதிய உணவு திட்டம் மட்டும் இருந்த நிலையில் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் இதுவும் தேமுதிக கொண்டுவர இருந்த திட்டம் . அந்த திட்டத்தை தான்.காலை உணவு திட்டம்கொண்டு வந்ததையும் தேமுதிக வரவேற்கிறது.

தமிழக பட்ஜெட்டில் விவசாயிகளுக்கானதிட்டங்களும் ,விவசாயிகள் வாழ்வாதத்திற்கானதிட்டங்களையும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் 2006 ல் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அதை செயல்படுத்துவதாக இருந்தால் அதையும் இந்த பட்ஜெட்டில் அறிவித்தது வரவேற்கக் கூடியது.

தற்போது போராட்டம் நடத்தும் எதிர்கட்சியினரை கைது செய்வது குறித்த கேள்விக்கு ?

கடந்த ஆளுங்கட்சியை எதிர்த்து போராடுபவர்கள் கைது செய்யப்படுவது காலங்காலமாக நடைபெறும் வழக்கம் 2026ல் தேர்தல்கூட்டணிக்கு முன்னோட்டமா தேமுதிக பட்ஜெட் பாராட்டு?
தேர்தல் வருவதற்கு இன்னும் ஒரு வருட காலம் இருக்கிறது.தேமுதிக நிலைப்பாடு என்ன என்பதுகுறித்து தேர்தல் நெருங்கும் போது தெரிவிப்போம்.

தமிழக பட்ஜெட்டில் தேமுதிக தேர்தல் அறிக்கை திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதற்கு வரவேற்பு தெரிவிக்கிறோம்.

டாஸ்மாக் ஊழலில் சிறு மீன்கள் முதல் பெரிய திமிங்கலம் வரை கைது செய்யப்படுவார்கள் என விஜய் கூறியது குறித்த கேள்விக்கு,

அதை விஜய் இடம் தான் கேட்க வேண்டும் உங்களைப் பொறுத்தவரை அமலாக்கத்துறை உரிய விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வரவேண்டும் என தெரிவித்தார். ஏற்கனவே இந்த வழக்கில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார் என பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.